Breaking News, Politics, State

அதிமுக ஒருங்கிணைப்பில் ஆர்வம் காட்டாத பாஜக.. தேர்தலில் வெற்றி பெற்றால் இபிஎஸ் ஒதுக்கப்படுவாரா?

Photo of author

By Madhu

ADMK BJP: தமிழகத்தில் முன்னணி கட்சியாக திகழும் அதிமுக 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி ஒரு வருடத்திற்கு முன்பே பாஜகவுடன் கூட்டணியை அமைத்து விட்டது. பாஜகவிற்கு தமிழகத்தில் காலூன்ற வேண்டுமென்ற ஆசையினால் மட்டுமே அதிமுக உடன் கூட்டணி வைத்திருப்பதாகவும், தேர்தலில் வெற்றி பெற்று விட்டால் தமிழகத்தில் அதிமுக ஆட்சியை தவிர்த்து பாஜக முன்னிலை பெரும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

இதற்காக தான் கொங்கு மண்டலத்திலுள்ள தொகுதிகளை கேட்டதாகவும் கூறப்படுகிறது. என்ன தான் அதிமுக ஒருங்கிணைய வேண்டுமென்று பாஜக கூறினாலும் அந்த முயற்சியில் அது ஈடுபடவில்லை என்றும் சொல்லப்படுகிறது. தற்போது அதிமுக இபிஎஸ் கையில் இருப்பதால் அவர் சொல்வதே வேதவாக்கு என்று கருதி ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன், செங்கோட்டையன் ஆகியோரை ஒருங்கிணைப்பதில் ஆர்வம் காட்டாமல் இருந்து வருகிறது.

பாஜக தலைமை அதிமுகவை புறக்கணித்து பெரிய மாற்றங்களை செய்ய தயாராக இல்லை என்பதை இது வலியுறுத்துகிறது. அதிமுக வட்டாரங்கள், பாஜக முக்கிய பங்காளியாக இருந்தாலும், 2026 தேர்தலில் கூட்டணிக்கு நாங்கள் தான் தலைமை வகிக்க வேண்டுமென வலியுறுத்துகிறார்கள். அதிமுகவிலிருந்து பிரிந்திருக்கும் சிலரை பாஜக தற்போது ஏற்க தயார் இல்லையென தோன்றுவதாக பேசப்படுகிறது.

தற்போது அதிமுக 5 அணிகளாக பிரிந்திருப்பதால் பாஜக யார் பக்கம் நிற்பதென்று தெரியாமல் திணறுகிறது என்ற கருத்தெல்லாம் பொய் என்றும், அதன் கவனம் முழுவதும் தமிழகத்தில் நிலைபெற வேண்டுமென்பது தான் என்பது இதிலிருந்து தெளிவாகிறது.

முடிவுக்கு வரும் அன்புமணியின் ஆட்டம்.. ராமதாஸ் வைத்த ட்விஸ்ட்!

அதிமுக-பாஜகவிற்கு எதிராக சதித்திட்டம் தீட்டும் அண்ணாமலை! உடனிருப்பது யார் தெரியுமா? வெளியான அதிர்ச்சி தகவல்..