திமுக வின் குடும்ப விமானத்தை அனுப்பி வைத்தால் தூது செல்ல தயார்!! பாஜக தலைவர் அண்ணாமலை!!

0
257
திமுக வின் குடும்ப விமானத்தை அனுப்பி வைத்தால் தூது செல்ல தயார்!! பாஜக தலைவர் அண்ணாமலை!!
திமுக வின் குடும்ப விமானத்தை அனுப்பி வைத்தால் தூது செல்ல தயார்!! பாஜக தலைவர் அண்ணாமலை!!

திமுக வின் குடும்ப விமானத்தை அனுப்பி வைத்தால் தூது செல்ல தயார்!! பாஜக தலைவர் அண்ணாமலை!!

 

காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு கட்டப்போகும் மேகதாது அணைக்கு எதிராக பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் மேகதாது அணையை கட்டுவதில் பிடிவாதமாக இருக்கிறது கர்நாடக அரசு. கர்நாடகாவில் புதிதாக பதவியேற்றுள்ள முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அவர்கள் இந்த அணை கட்டுதல் விவகாரத்திற்க்கு அனுமதி வழங்க கோரி டெல்லி சென்று உள்ளார். அங்கு பிரதமர் மோடி மற்றும் அமைச்சர் கஜேந்திர சிங் செகவாத் ஆகியோரை சந்தித்து பேசியுள்ளார்.

 

இந்த விவகாரம் தொடர்பாக பேசிய திமுக எம் பி தயாநிதி மாறன், தமிழ்நாட்டில் பாஜக கட்சி எவ்வளவு போராடினாலும் மேகதாது அணை கட்டுவதில் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தீவிரமாக இருக்கிறார். இதை சுமுகமாகத் தீர்க்க தமிழகத்தின் மாவீரன் பாஜக தலைவர் அண்ணாமலையே தூதுவராக அனுப்புவோம் என்று அவர் கூறினார்.

 

இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்தார். அவர் கூறியதாவது, கொரோனா தோற்று பாதிப்பில் மக்கள் துன்புற்று இருந்தபோது டி20 விளையாட்டு போட்டியை ரசித்துக் கொண்டிருந்த தயாநிதி மாறன் அவர்கள் மேகதாது அணையை பற்றி கவலைப்பட்டதற்கு நன்றி. மேலும், உங்களின் சிறப்பு விமானத்தை அனுப்பி வைத்தாள் நான் மாநிலத்தில் உள்ள ஏழை விவசாயிகளை அழைத்துக் கொண்டு கர்நாடகாவிற்கு தூது செல்ல தயாராக உள்ளேன். இதை அவர் மாமா மு. க. ஸ்டாலின் அனுமதிப்பாரா?? என்று அவரின் ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

Previous articleதடையை மீறி உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவோம்!! பாஜக செயலாளர் ஹெச். ராஜா!!
Next articleபிரண்ட்ஷிப் தின ஸ்பெஷலாக அனிருத் பாடிய நட்பு பாடல்!! இணையதளத்தில் வைரல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here