Kanavu Palangal in Tamil : இப்படி எல்லாம் கனவுகள் வந்தால் பலன்கள் இப்படி தான் இருக்கும்!

0
1034
If dreams come true like this, the benefits will be the same!
If dreams come true like this, the benefits will be the same!

Kanavu Palangal in Tamil : இப்படி எல்லாம் கனவுகள் வந்தால் பலன்கள் இப்படி தான் இருக்கும்!

பொதுவாக நமக்கு வரும் கனவுகள் அனைத்தும் நம் உள் மனதின் எண்ணங்கள், ஆழ் மனதின் எண்ணங்களில் இருந்து வருவதாக அறிவியலாளர்கள் சொல்வார்கள். ஒன்றா நாம் ஏற்கனவே நாம் அங்கு சென்று பரிச்சயமான இடமாக இருக்கும் அல்லது இனிமேல் வருங்காலத்தில் நாம் காணக்கூடிய இடங்களாக இருக்கும். ஆனால் அந்த வகையில் நிறைய இடங்கள் நாம் அப்படி எங்கோ பார்த்த நமக்கு பரிச்சயமான இடங்கள் போலவே இருக்கும்.

அப்படி இருக்க காரணம் அதிகபட்சம் நமக்கு வரும் கனவுகளே. இது நமது ஆழ் மனதின் எண்ணங்களை தவிர வேறு எதுவும் இல்லை என்றும் சிலர் சொல்கின்றனர். அப்படி வரும் கனவுகளில் சில நல்ல கனவுகளும் உள்ளது. கெட்ட கனவுகளும் உள்ளது.

அது நமது சூழ்நிலைகளைப் பொறுத்து அமையும். கனவுகள் காணும் போதுதான் ஒரு மனிதன் ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்வதாக சொல்வார்கள். அதுவும் அதிகாலை நேரத்தில் வரும் கனவுகள் நிச்சயம் நடக்கும் என்றும் ஒரு சிலர் சொல்வார்கள்.

அதிகாலை சமயங்களில் வரும் கனவுகளை நாம் பலமுறை யோசித்தாலும் சில நேரங்களில் அது நினைவுக்கு வராது. ஆனால் சில கனவுகள் நம் எண்ணத்திலேயே இருக்கும்படி நடக்கும். இது சரியா? அல்லது தவறா? என்று நமது யோசித்துக் கொண்டே இருப்போம். ஆனால் அதில் சில விஷயங்களை நாம் என்னவென்று தெரிந்து கொள்ளலாம்.

நாம் கனவில் மகாலட்சுமி, முருகன், குபேரன், வெங்கடாஜலபதி போன்ற தெய்வங்கள் ராஜ அலங்காரத்தில் தெய்வங்கள் வந்தால் நமக்கு செல்வ வளம் வருவதாக அர்த்தம் என்றும், சிவபெருமான் வரும் போது நமக்கு ஆன்மீகத்தில் உயர்ந்த நிலையை அடையப் போகிறோம் என்றும் சில தகவல்களில் உள்ளது.

அதே போல் அவர்களது அருள் நமக்கு எப்போதும் கிடைக்கும் என்றும் அர்த்தம். அதேபோல் கோவில் கோபுரங்கள் கனவில் வந்தால் நாம் மிக உயர்ந்த, உன்னதமான நிலைக்கு  செல்வதாக அர்த்தம் என்றும், எதிர்பாராத அதிர்ஷ்டம் நமக்கு வருவதாக கூட சொல்வார்கள். இதேபோல் கோவில் மணி ஓசை நமக்குக் கேட்டால் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும் என்றும், அதோடு நமக்கு இருக்கும் பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து விடும் என்றும் சொல்லப்படுகிறது.

அதேபோல் கடவுள்கள் இடமோ அல்லது பெரியவர்களிடமோ ஆசி பெறுவது போல கனவு வந்தால் நாம் நினைத்த வேலை, பெரிய பதவி, அரசு உத்தியோகம், வேலை மாறுதல், அரசு உத்தியோகம், புதிய தொழில் தொடங்குதல் போன்ற பல நல்ல விஷயங்கள் நடப்பதாகவும் சொல்கிறார்கள். அதே போல் இறந்து போன நம் முன்னோர்கள் கனவில் வரும் பட்சத்தில் அவர்கள் நமக்கு வரும் ஆபத்தை பற்றி நமக்கு கூறுவதாக நாம் நினைத்துக் கொள்ள வேண்டும்.

அதே போல் அவர்களது ஆசி நமக்கு என்றும் கிடைக்கும் என்றும், அவர்கள் நம்முடன் இருந்து நம்மை வழி நடத்திச் செல்வதாகவும் சொல்கிறார்கள். அதேபோல் நாமக்கு தெரிந்தவர்கள்  இறந்தது போல கனவு வரும் சிலருக்கு. அப்படி கனவில் வரும் போது, அவர்களுக்கு இருக்கும் பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து நல்லபடியாக இருப்பார்கள் என்றும் சொல்கிறார்கள். அப்படி வரும் பட்சத்தில் அது நல்ல சகுனம் தான் என்றும் கூறுகிறார்கள். எப்போதுமே ஒரு கெட்ட விஷயம் வரும்போது, அதற்கு நல்ல விஷயம் நடக்கும் என்று கூறுகிறார்கள்.

அதேபோல் தயிர் சாதம் நம் கனவில் தயிர் சாதம் சாப்பிடுவது போல் தோன்றுவது, ஓடை மற்றும் தண்ணீர் செல்வதை பார்ப்பது இது எல்லாமே நல்ல அறிகுறிகள் தான் என்றும் சொல்கிறார்கள்.

Previous articleதேசிய அளவில் ருத்ர தாண்டவம் திரைப்படத்திற்கு கிடைத்த அங்கீகாரம்! உற்சாகத்தில் படக்குழுவினர்
Next articleசேலம் மாவட்டத்திலிருந்து மேட்டுரை பிரித்து புதிய மாவட்டம் – பாமக எம்.எல்.ஏ கோரிக்கை