சீமானுக்கு எச்சரிக்கைவிடுத்த திமுக எம்.எல்.ஏ!

Photo of author

By Sakthi

எதிர் வரும் சட்டசபைத் தேர்தலின்போது, திமுக தலைவர் ஸ்டாலின் என்று தொகுதியில் நிற்கின்ற அதே தொகுதியில் நான் போட்டியிடுவேன் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருக்கின்றார். ஸ்டாலின் எதிர்த்து சீமான் களமிறங்கினால் டெபாசிட் கூட கிடைக்காது என்று அந்தக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் மா .சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்த அவர், அரசு தரும் பொங்கல் பரிசை தரவேண்டாம் என நாங்கள் சொல்லவில்லை. மாறாக ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் வழங்கவேண்டும் என்றுதான் சொல்கிறோம். டெபாசிட் தொகை கூட வாங்காமல் செல்வதற்காக தான் திமுக திமுக தலைவர் ஸ்டாலின் எதிர்த்து போட்டியிடுவதற்கு முடிவு செய்து இருக்கின்றார். ரஜினி அரசியலில் இருந்தாலும். இல்லாவிட்டாலும். திமுகவிற்கு எப்பொழுதுமே பிரச்சினை கிடையாது என்று தெரிவித்தார்.