கங்கனாவை நேரில் சந்தித்தால் இரண்டு முறை கன்னத்தில் அறைவேன்!!! பிரபல நடிகை பேட்டி!!!

Photo of author

By Sakthi

கங்கனாவை நேரில் சந்தித்தால் இரண்டு முறை கன்னத்தில் அறைவேன்!!! பிரபல நடிகை பேட்டி!!!

Sakthi

Updated on:

கங்கனாவை நேரில் சந்தித்தால் இரண்டு முறை கன்னத்தில் அறைவேன்!!! பிரபல நடிகை பேட்டி!!!
நடிகை கங்கனா ரனாவத் அவர்களை நேரில் சந்தித்தால் அவர்களுடைய கன்னத்தில் இரண்டு முறை அறைவேன் என்று பிரபல பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த  நடிகை நவுஷீன் ஷா அவர்கள் கூறியுள்ளார்.
பிரபல ஹிந்தி நடிகை கங்கனா ரனாவத் அவர்கள் தமிழில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் என்ற திரைப்படத்தில் நடித்தார். அதன் பிறகு பல வருடங்களுக்கு பிறகு தமிழில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான தலைவி திரைப்படத்தில் நடித்தார்.
தற்பொழுது இயக்குநர் பி வாசு இயக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள சந்திரமுகி 2 திரைப்படத்தில் சந்திரமுகி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். சந்திரமுகி 2 திரைப்படம் செப்டம்பர் மாதம் 15ம் தேதி வெளியாகவுள்ளது.
பிரபல நடிகை கங்கனா ரனாவத் அவர்கள் அடிக்கடி சமூக வலைதளங்களில் சர்ச்சையான கருத்துக்களை பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்துவார். இந்நிலையில் நடிகை கங்கனா ரனாவத் அவர்களை நேரில் சந்தித்தால் இரண்டு முறை அவருடைய கன்னத்தில் அறைந்து விடுவேன் என்று பாகிஸ்தான் நாட்டின் பிரபல நடிகை நவுஷீன் ஷா அவர்கள் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் நாட்டு நடிகை நவுஷீன் ஷா அவர்கள் “நடிகை கங்கனா ரனாவத் அவர்களை நேரில் சந்திக்க விரும்புகிறேன். அவ்வாறு நேரில் சந்தித்தால் நடிகை கங்கனா ரனாவத் அவர்களின் கன்னத்தில் இரண்டு முறை அறைந்து விடுவேன்.
நடிகை கங்கனா ரனாவத் அவர்கள் பாகிஸ்தான் நாட்டை பற்றியும் பாகிஸ்தான் ராணுவம் பற்றியும் தவறான கருத்துக்களை கூறி வருகிறார். முதலில் மற்ற நாடுகளை பற்றி எதற்காக பேச வேண்டும். உங்கள் நாட்டின் மீது முதலில் கவனம் செலுத்துங்கள். உங்களுடைய திரைப்படங்களை நீங்கள் பாருங்கள். உங்கள் முன்னாள் காதல் குறித்தும் உங்களின் மீது இருக்கும் சர்ச்சைகள் குறித்தும் பேசுங்கள்” என்று அவர் கூறி இருக்கிறார்.