செந்தில் பாலாஜி கோவைக்கு சென்றால் கரூர் நம்ப பக்கம் தான்.. அடித்து ஆடும் இபிஎஸ்!!

0
258
If Senthil Balaji goes to Coimbatore, it's Karur Namba's side!!
If Senthil Balaji goes to Coimbatore, it's Karur Namba's side!!

ADMK DMK: தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் பரபரப்பாக உள்ளது. இந்த பரபரப்புக்கு தீனி போடும் வகையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் தேர்தலில் போட்டியிட உள்ளது. அரசியல் களத்தில் அதிமுக தான் எப்போதும்-திமுகவை எதிர்த்து வரும், ஆனால் இந்த முறை தவெகவும் திமுகவை எதிர்கிறது.

இதனால் திமுகவை வலுப்படுத்தும் வகையில், அதிமுக சட்டமன்ற தேர்தலில் தொடர்ந்து வெற்றியை பதிவு செய்த கோவையில், கரூரின் முகமாக அறியப்பட்டு வரும் செந்தில் பாலாஜியை களமிறக்க உள்ளது. கோவையில் எஸ்.பி. வேலுமணி தான் அதிமுக அமைச்சராக உள்ளார். இவரின் செல்வாக்கை உடைக்கவே இந்த திட்டம் என்று சொல்லப்படுகிறது.

ஆனால் இபிஎஸ் இதெற்கெல்லாம் அஞ்சுவதாக தெரியவில்லை. கோவையில் திமுக எவ்வளவு முயற்சிகளை மேற்கொண்டாலும், அங்கு அவர்களால் காலூன்ற முடியாது என்பதை அறிந்த இபிஎஸ், கரூரில் அதிமுகவை நிலை நாட்டுவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளாராம். கரூரில் ஏற்பட்ட துயரத்தால் அப்பகுதி மக்கள், செந்தில் பாலாஜி மீதும், விஜய் மீதும் அதிருப்தியில் உள்ளதை இபிஎஸ் பயன்படுத்தி கொள்ளப்போவதாக சொல்லப்படுகிறது.

செந்தில் பாலாஜியின் மேல் உள்ள பண மோசடி வழக்கையும், கரூரில் ஏற்பட்ட துயரத்தையும் நினைவுப்படுத்தி இதற்கு காரணம் திமுக தான் என்று உறுதிப்படுத்த போவதாகவும் சொல்லப்படுகிறது. செந்தில் பாலாஜி, கோவைக்கு செல்வதை இபிஎஸ் மிகவும் சாமர்த்தியமாக பயன்படுத்துவதை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

Previous articleபாஜகவின் தூதாக மாறிய துணை முதல்வர்.. எதிர்கட்சி தலைவர் இல்லனா துணை முதல்வர்.. இல்லனா ஜீரோ ஆகிடுவிங்க விஜய்!!
Next articleசெங்கோட்டையன் இல்லன்னா என்ன விஜய் இருக்காருல்ல? இபிஎஸ்யை ஆதரிக்கும் ஈரோடு மக்கள்!!