ADMK BJP: தமிழகத்தில் மிகப்பெரிய திராவிட கட்சியாக அறியப்பட்டு வரும் அதிமுகவும், உலகத்திலேயே பெரிய கட்சியாக திகழும் பாஜகவும் 2026 சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு வெற்றி பெற வேண்டுமென்ற நோக்கில் 1 வருடத்திற்கு முன்பே கூட்டணி அமைத்து விட்டது. இவர்கள் இருவரும் கூட்டணி அமைத்த உடன் பாஜகவிலும், அதிமுகவிலும் உட்கட்சி பிரச்சனை தொடங்கியது.
கூட்டணி அமைத்த உடனேயே பாஜக மாநில தலைவராக இருந்த அண்ணாமலை பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அதற்கு பின், பாஜக கூட்டணியிலிருந்து டிடிவி தினகரனும், ஓ.பன்னீர்செல்வமும் புதிய பாஜக தலைவர் நயினாரின் செயல்பாடுகள் பிடிக்காமல் வெளியேறினார்கள். அதன் பின் அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென்று கூறிய செங்கோட்டையனை இபிஎஸ் பதவிகளிலிருந்து நீக்கினார்.
இதனை எதிர்கொள்ள முடியாத செங்கோட்டையன் மத்திய அமைச்சர்களின் உதவியை நாடினார். அப்போதும் ஒரு மாற்றமும் நிகழவில்லை. கூட்டணியிலிருந்து வெளியேறிவர்களை இணைக்கும் முயற்சியிலும் பாஜக ஈடுபடவில்லை. இந்த சம்பவம் அனைத்திற்கும் பாஜக தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. ஏனென்றால் அதிமுகவில் இருக்கும் பலவீனம் தான் நமக்கு பலம் என்று பாஜக நினைக்கிறது. இவர்கள் மீண்டும் ஒன்றிணைந்து விட்டால் பாஜகவுக்கான மவுசு அதிமுகவில் குறைந்து விடும்.
கூட்டணி வைக்கமலேயே பிரிந்து சென்றவர்களின் ஆதரவை வைத்து ஆளுங்கட்சியாக ஆக முடியவில்லை என்றாலும், எதிர்கட்சியாக ஆகும் வாய்ப்பு உள்ளது. மேலும் இவர்கள் ஒன்று சேர்ந்து அதிக தொகுதிகளை கேட்டால், பாஜகவுக்கான தொகுதிகளும், ஆட்சி பங்கும் குறைந்து விடும். இதையெல்லாம் கணித்த பாஜக இவர்களின் ஒருங்கிணைப்பில் கவனம் செலுத்தாமலும், அவர்களை மீண்டும் சேர விடாமலும் தடுக்கிறது என்ற கருத்தும் நிலவுகிறது.