என்னது வீடு புகுந்து வெட்டுவியா? அதிமுக பிரமுகர் மீது பாய்ந்த 3 வழக்குகள்!

Photo of author

By Sakthi

என்னது வீடு புகுந்து வெட்டுவியா? அதிமுக பிரமுகர் மீது பாய்ந்த 3 வழக்குகள்!

Sakthi

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அண்ணா நகரில் நடைபெற்ற நகராட்சித் தேர்தலுக்கான அதிமுக ஆலோசனை கூட்டத்தில் அதிமுக ஒன்றிய செயலாளர் சண்முகக்கனி மிரட்டலாக உரையாற்றியிருக்கிறார்.

அதில் அவர் தெரிவித்ததாவது, அதிமுக கரை வேட்டி கட்டியிருக்கும் வரையில் தான் நமக்கு மரியாதை, அதிமுகவிற்கு துரோகம் நினைத்தால் அவர்கள் நன்றாக இருக்க மாட்டார்கள் என்று கூறியிருக்கிறார்.

இரட்டைஇலைச் சின்னத்தில் தேர்தலில் நின்று வெற்றி பெற்றுவிட்டு, பதவி சுகத்தை அனுபவித்துவிட்டு, கட்சிக்கு துரோகம் இழைத்தவர்கள் அனைவரும் மறுபடியும் கட்சிக்கு திரும்பி வந்து விட்டார்கள் என குறிப்பிட்டிருக்கிறார்.

 

நகராட்சித் தேர்தலில் கவுன்சிலர் பதவிக்காக போட்டியிடும் அதிமுகவை சேர்ந்தவர்கள் வெற்றியடைந்து அதன்பிறகு கட்சி மாறி சென்று விட்டால் வீடு புகுந்து அவர்களை வெட்டுவேன் முன்னரே என் மீது வழக்குகள் இருக்கின்றன. இன்னொரு வழக்கை சந்திக்கவும் நான் தயாராக இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

கொலை மிரட்டல்விடுக்கும் வகையில் நடந்துகொண்டது, கலவரத்தை உண்டாக்கி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக உரையாற்றியது, போன்ற 3 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.