8 எம்.எல்.ஏக்கள் இருந்தால் கூட்டணி உறுதி.. இல்லையென்றால் எதிர்க்கட்சி கூட்டணி தான்.. தேமுதிக அதிரடி முடிவு!!

0
657
If there are 8 MLAs, then the alliance will be confirmed.. Otherwise it's the opposition alliance..DMDK action decision!!
If there are 8 MLAs, then the alliance will be confirmed.. Otherwise it's the opposition alliance..DMDK action decision!!

DMDK DMK: சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. பிரபல நடிகராக அறியப்பட்டு வந்த விஜய்யும் திமுகவிற்கு மாற்று எனக் கூறி தேர்தலில் போட்டியிட இருக்கிறார். இவர் யாருடன் கூட்டணி அமைப்பார் என்பது பெரிய கேள்வியாக இருக்கும் நிலையில், இவரின் கூட்டணி பொறுத்து தான் மூன்றாம் நிலை கட்சியாக அறியப்பட்டு வரும் தேமுதிக, பாமக போன்ற கட்சிகளின் கூட்டணியும் உறுதி செய்யப்படும் என்பது தெளிவாக தெரிகிறது.

இந்நிலையில் தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த், விஜய் அதிமுகவில் இணைந்தால் நாங்களும் இணைவோம் என்று கூறியதாக தகவல் வெளியானது. அது இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில், அதிமுக கூட்டணி பலமடைவதை உணர்ந்த திமுக தலைமை, தேமுதிகவும் அதிமுக கூட்டணிக்கு சென்று விடக் கூடாது என்பதில் கவனமாக உள்ளது. அதனால் பிரேமலதாவுடன் திமுகவை சேர்ந்த முக்கிய தலைவர்கள் பேச்சு வார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.

அப்போது பிரேமலதா, திமுகவில் இணைய வேண்டுமானால் 6 அல்லது 8 எம்எல்ஏக்கள் வேண்டும் என்றும், அதிக தொகுதிகளையும் கேட்டதாக தகவல் வந்துள்ளது. இல்லையென்றால் அதிமுக கூட்டணி அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளார். ஏற்கனவே திமுக கூட்டணி கட்சிகள் அதிக தொகுதிகளையும் ஆட்சிப் பங்கையும் கேட்டு வலியுறுத்தி வரும் நிலையில் திமுக தலைமை என்ன செய்யும் என்பது தற்போது கேள்வி குறியாக உள்ளது.

ஆனால் தேமுதிகவையும் விட்டு வைக்க ஸ்டாலினுக்கு மனமில்லை. அதிமுக, தவெக, பாஜக கூட்டணியின் பலத்தை உடைக்க வேண்டுமானால் தேமுதிக கூட்டணி திமுகவுக்கு தேவை. ஆனால் திமுகவின் கூட்டணி கட்சிகளோ தேமுதிகவிற்கு 8 எம்எல்ஏக்கள் ஒதுக்கப்படுவதில் தங்களுக்கு விருப்பம் இல்லையென்று கூறி வருகின்றனர்.

Previous articleயாரும் எதிர்பார்த்திராத கூட்டணி அமையும்.. அந்த கூட்டணி தான் வெற்றி பெரும்.. டிடிவி தினகரன் சூசகம்!!
Next articleமோடிக்கு துரோகம் செய்து விட்டு பச்சோந்தி போல பாஜகவில் சேர்ந்துள்ளார்.. கொந்தளிப்பில் டிடிவி தினகரன்!!