குலதெய்வம் என்பது நமது வாழ்வின் மிகப்பெரிய ஒரு சக்தி. எனவேதான் நமது குலம், குல வழி ஒழுக்கம், குலவழிப் பண்புகள் ஆகிய அனைத்தும் நமக்கு தேவையானவை. இத்தகைய புண்ணிய வழியில் நாமும் நிற்க வேண்டும் என்றால் குலதெய்வத்தை வணங்குவது மிகவும் அவசியம். குலதெய்வத்தின் அருள் இருந்தால் அனைவரது வாழ்க்கையும் சீராகும்.
எனவேதான் நமது முன்னோர்கள் குலதெய்வத்தை என்றும் மறக்கக் கூடாது என்று கூறியுள்ளனர்.
சாபம் மற்றும் தோஷங்களால் நமது வாழ்க்கை பின்னோக்கி நகர்வதை நம்மால் உணர்ந்திருக்க முடியும். இதுபோன்ற சாபம் மற்றும் தோஷங்களில் இருந்து விலக வேண்டும் என்றால் குலதெய்வத்தின் அனுக்கிரகம் நமக்கு மிகவும் அவசியம்.
அந்த குலதெய்வத்தின் ஒளி மற்றும் அதன் சக்தி ஏழு விதமான மங்களகரமான செடிகளில் மறைந்திருக்கிறது என்பதை நீங்கள் உணர்ந்தால், வாழ்க்கை ஒரு நெடுநடையை போல் தன்னம்பிக்கையுடன் வெற்றியை நோக்கி நகரும்.
எனவேதான் செடிகள் என்பது மிகவும் முக்கியம். ஒவ்வொரு செடியும் ஒவ்வொரு விதமான மங்களத்தன்மை மற்றும் அதிர்வுகளை கொண்டிருக்கும். அதனால்தான் கோவிலில் ஸ்தல விருட்சம் என்பதை கொடுத்தார்கள்.
கோவில்கள் மூன்று சக்திகளை கொண்டவை. ஸ்தலம், தீர்த்தம், மூர்த்தி ஆகியவை ஆகும். இவை மூன்றுமே நமது ஆன்மீக வளர்ச்சிக்கு மிகவும் அவசியமானவை.ஸ்தலவிருட்சம் என்றால் வெறும் மரம் அல்ல. அது தெய்வீக சக்தியின் வெளிபாடு. இந்த மாதிரியான செடிகளை உங்கள் வீடுகள் மட்டும் தோட்டங்களில் வளர்த்து வந்தீர்கள் என்றால் காற்று சுத்தமாகும். அதிர்வுகளை அமைதியாக வெளிப்படுத்தும்.
அந்த அதிர்வுகள் நம்மை மாற்றும். இந்த செடிகள் அனைத்தும் நமது பாட்டன், முப்பாட்டன் வணங்கிய செடிகள்.
இந்த செடிகள் தேவலோகத்தில் இருந்து பூமிக்கு வந்ததற்கான நோக்கத்தை நாம் உணர்ந்தாலே போதும் அது நம்மை வழி நடத்தும். இந்த செடிகள் அனைத்தும் தெய்வீக அதிர்வுகளை நமக்கு கொடுக்கக்கூடிய ஒன்று.
1. சங்குப்பூ செடி:
இந்த செடியில் இருக்கும் பூவின் நீல நிறம், அதன் மென்மை, அதன் தெய்வீக அசைவுகள் ஆகிய அனைத்தும் நம்மை ஈர்க்கும். இந்தச் செடியில் நிறைய தெய்வங்கள் குடியிருக்கிறார்கள். குறிப்பாக நமது குலதெய்வம் வாசம் செய்யக்கூடிய செடியாகும்.
இந்தச் செடியில் தான் ஸ்ரீ விஷ்ணு, சிவன், சனிபகவான் மிகவும் பிடித்தமான செடியும் இதுதான். இந்தச் செடி இருக்கக்கூடிய வீடுகளில் பஞ்சம் என்பதே இருக்காது. பண வரவு அதிகரிக்கும்.
2. பிரம்ம கமலம்:
பிரம்ம கமலம் பூவினை வணங்கும்பொழுது குலதெய்வம் எது என்று தெரியாதவர்களுக்கு கூட குலதெய்வத்தை அடையாளம் காட்டி கொடுத்து விடும். இந்த பூவினை வழிபட்டால் நினைத்த காரியம் நடக்கும், பிரார்த்தனைகள் நிறைவேறும். குலதெய்வத்தின் கடாட்சம் உண்டாகும். தெய்வங்களின் ஆசிர்வாதம் நமது வீட்டில் நிலை நிற்கும்.
3. நாயுருவி செடி:
இந்த நாயுருவி செடியானது புதனை குறிக்கக்கூடிய சக்தி வாய்ந்த ஒரு மூலிகை. இது ஒரு தேவ மூலிகையும் கூட. குலதெய்வத்தின் சக்தியை நேராக ஈர்க்கக் கூடிய செடியும் இந்த செடிதான். இந்த செடியானது பண வரவையும் ஈர்க்கும். இந்தச் செடியின் இலைகளை காய வைத்து சாம்பிராணி தூபம் போட்டால் வீடு, மனம், உடல் ஆகிய அனைத்தும் தூய்மை அடையும்.
இந்த செடியானது குலதெய்வ வசியத்தை உண்டாக்கும்.
4. மாதுளை செடி:
மாதுளை செடியானது மகாலட்சுமி வாசம் செய்யக்கூடிய செடி. இவர் வசிக்கக் கூடிய இடத்தில் எப்பொழுதும் செல்வம் நிறைந்திருக்கும். மாதுளை பழ தோலை காய வைத்து சாம்பிராணி தூபத்தில் போட்டு காண்பித்தால், மகாலட்சுமியின் அம்சம் வீடு முழுவதும் நிறைந்திருக்கும். இந்த செடியானது குலதெய்வத்தின் அருள், அதிஷ்டம், பணம் ஆகிய அனைத்தையும் ஈர்க்கக் கூடிய ஒரு செடி ஆகும்.
5. வெற்றிலை கொடி:
வெற்றிலைக் கொடி என்பது வெறும் இலை அல்ல, அது நமது வாழ்க்கையில் வெற்றிகளை கூட்டி, தோல்விகளை துரத்தும் ஒரு தெய்வீக சக்தியாகும். வெற்றிலை கொடியை தனியாக வளர்க்க கூடாது அதனுடன் வேறொரு செடியையும் உடன் சேர்த்து வளர்த்தால் மட்டுமே அது பயன் தரும்.
ஒரு சில வீடுகளில் வெற்றிலை செடியை எத்தனை முறை வைத்தாலும் வளரவில்லை என்று கூறுவார்கள். அவ்வாறு இருப்பவர்கள் சாம்பிராணி தூபம் காட்டி, சிறிதளவு மஞ்சளை செடியின் மேல் தூவி விட வேண்டும். வெற்றிலை செடி வீட்டில் இருந்தால் தொட்டது அனைத்தும் வெற்றியில் முடியும்.