கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி சண்டையா? சரி செய்ய இனி இதை கடைபிடியுங்கள்

Photo of author

By Pavithra

திருமணமான ஒவ்வொரு ஆண் மற்றும் பெண்ணிற்கும் இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சினை இருவரில் யார் பெரியவர்கள் என்ற கருத்துவேறுபாடு இதனாலேயே பல பிரச்சனைகள் இல்லற வாழ்க்கையில் உருவெடுக்கின்றன. கணவன்-மனைவி இருவருமே கீழே உள்ள வழிகளைப் பின்பற்றி பாருங்கள் உங்கள் இல்லற வாழ்வில் உள்ள பிரச்சினைகள் நீங்கும் என்று நம்புகிறோம்.

முதலில் கணவன் மனைவி இருவருமே வேறு வேறு இல்லை இருவரில் ஒருவர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

நீ இல்லாமல் நான் வாழ்ந்து விடுவேன் என்று கணவன் மனைவியிடமோ, அல்லது மனைவி கணவனிடமோ எக்காரணம் கொண்டும் சொல்லவே கூடாது. ஏனெனில் ஒருவர் இல்லாமல் இன்னொருவர் வாழ முடியாது என்பதை உணர வேண்டும். (வேர் இல்லாமல் மரம் இல்லை) (இதில் கணவன் மனைவி என்ற வேர் இல்லாமல் குடும்பம் என்ற மரம் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்).

பெண்களின் நோய்க்கு மிக சிறந்த மருந்து கணவர்களின் அன்பான ஒற்றைச்சொல் மட்டுமே எனவே ஆண்கள் பெண்களிடம் அவர்கள் வலிமை இழந்து இருக்கும் நிலையில் அன்பான வார்த்தைகளை பேச வேண்டும்.இதுவே பெண்கள் ஆண்களிடம் எதிர்பார்க்கும் உச்சகட்ட எதிர்பார்ப்பு.ஓவ்வொரு ஆண் மகனும் இது ஒன்றை புரிந்து கொண்டால் போதும்.

பெண் தனது கணவனின் குறைகளை மற்றவர்களிடத்திலோ அல்லது ஆண் தனது மனைவியின் குறைகளை மற்றவர்கள் இடத்திலோ ஒருபோதும் கூற கூடாது இதை மற்றவர்களிடத்தில் சொல்வதைவிடபெண் கணவனிடமும் ஆண் மனைவி இடமும் பகிர்ந்து கொண்டாலே போதும் குடும்பத்தில் எந்தவிதமான பிரச்சினையும் வராது.ஆனால் இவ்வாறு சொல்லும் பட்சத்தில் அது குறைகளாக சொல்லாமல் அன்பான வார்த்தையில் சொல்ல வேண்டும்.

கணவனோ அல்லது மனைவியோ தவறு செய்துவிட்டால் அவர்களை குழந்தையாக பாருங்கள் அந்த இடத்தில் கோபம் இருக்காது அக்கறை மட்டுமே இருக்கும்.

கணவன் மனைவி இருவரின் வேலைச் சுமைகளையும் இருவரும் அறிந்து அனுசரித்துச் செல்லவேண்டும்.

ஒரு ஆணின் வலிமை என்பது மற்றவரிடத்தில் காட்டுவதில்லை.தன் வலிமையால் ஒரு குடும்பத்தை உயர்த்துவதே ஒருவனின் வலிமையாகும். பெண்ணிற்கும் அதே போல தான். ஒரு பெண்ணின் வலிமை என்பது தான் புகுந்த வீட்டில் உள்ளவர்களை எவ்வளவு அனுசரித்து நடந்து கொள்கிறோம் என்பதே அவர்களின் வலிமையையும் அவர்களின் வளர்ப்பையும் எடுத்துக்காட்டும். இதைப் புரிந்துகொண்டு கணவன் மனைவிகள் நடந்துகொண்டால் இல்லறத்தில் எந்தவிதமான பிரச்சினைகளும் வராது.

கணவன் மனைவிக்கும் மனைவி கணவனுக்கும் அடிமை இல்லை, என்னதான் இருவரும் கணவன் மனைவியாக இருந்தாலும் இருவருக்கும் தனிமனித சுதந்திரம் என்பது உண்டு அதை ஒரு போதும் இருவரும் தட்டிப் பறிக்கக் கூடாது.

இங்கு இருவருக்கும் எதிர்பார்த்த ஆடம்பரம் வசதி அனைத்தும் கிடைக்கப் பெற்று விடுகிறது. ஆனால் இருவருக்கு இடையேயான அன்பு பரிமாற்றம் மட்டுமே குறைவாக உள்ளது. இந்த குறைவை மிகையாக மாற்றங்கள்.ஒரு பொழுதும் உங்கள் இல்லற வாழ்வில் சண்டைகள் வராது.