சிவபெருமானின் முழுமையான அருளை பெற்ற ஒரு மூலிகையை கொண்டு நமது வீடுகளில் உள்ள சகல விதமான பிரச்சினைகளையும் தீர்க்க முடியும். இந்த ஒரு மூலிகை காய் இருந்தால் போதும் நமது வீடுகளில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்குமான தீர்வினை காணலாம். அந்த மூலிகை என்னவென்றால் சிவனுக்கு மிகவும் பிடித்த கரு ஊமத்தை. காசி போன்ற சிவன் ஆலயங்களுக்கு சென்றால் அங்கு கரு ஊமத்தை மற்றும் அதன் பூவினை கொண்டு சிவனுக்கு வழிபாடு செய்வார்கள். அந்த அளவிற்கு மிகவும் சக்தி வாய்ந்த மூலிகை தாவரம் இது.
நமது வீடுகளிலோ, அலுவலகங்களிலோ அல்லது கடைகளிலோ பில்லி, சூனியம், ஏவல், கண் திருஷ்டி போன்ற ஏதேனும் ஒன்று இருப்பதாக நாம் உணர்ந்தால் அதனை கரு ஊமத்தையை கொண்டு தீர்க்கலாம். இந்த கரு ஊமத்தை ஆனது சாலையோரங்களிலோ அல்லது காடுகளிலோ கிடைக்கும். அவ்வாறு கிடைக்கவில்லை என்றால் நாட்டு மருந்து கடைகளில் இதனை வாங்கிக் கொள்ளலாம்.
இந்த கரு ஊமத்தையை நமது வீட்டு வாசலில் வைத்து அதன் முன்பு ஒரு கற்பூரத்தினை ஏற்றி விட்டு அந்த கரு ஊமத்தையை இரண்டாக வெட்டி ஒருபுறம் மஞ்சள் மறுபுறம் சிவப்பு தடவி வலது கையில் உள்ளதை இடது புறமாகவும், இடது கையில் உள்ளதை வலது புறமாகவும் வைத்து விட வேண்டும். அவ்வாறு வைக்கும் பொழுது மனதில் சிவனையும், ஆதிபராசக்தியையும், குலதெய்வத்தையும் மனதார வேண்டிக்கொண்டு பில்லி, சூனியம், ஏவல், கண் திருஷ்டி போன்ற எந்த தீய சக்திகளும் எனது வீட்டிற்கு வரக்கூடாது என வேண்டிக் கொள்ள வேண்டும்.
சில குழந்தைகள் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது திடீரென எழுந்து அழும். அதேபோன்று சில பேருக்கு தூக்கம் வராமல் நடு இரவில் மிகவும் துன்பத்தை கொடுக்கும். அதுபோன்ற சமயங்களில் அவர்களை தெற்கு திசையை பார்த்தவாறு நிற்க வைத்து, கரு ஊமத்தையை நான்காக அறுத்து அதனுள் சிவப்பினை தடவி ஒரு கற்பூரத்தினை வைத்து ஏற்றி அவர்களது தலையை வலது புறம் மற்றும் இடது புறமாக மூன்று முறை சுற்றி நான்கு பக்கமும் தூக்கி எறிந்து விட்டு கை, கால்களை கழுவி விட வேண்டும்.
இவ்வாறு செய்வதன் மூலம் அவர்களிடம் உள்ள தீய சக்திகள் நீங்கி அவர்களுக்கு நல்ல தூக்கத்தினை ஏற்படுத்தும். நமது வீடுகளில் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் சிவப்பினை தடவி அறுத்து வைத்தாலே பல நன்மைகள் நடைபெறுவதை நாம் காணலாம். இவ்வளவு சக்தி வாய்ந்த கரு ஊமத்தையை தான் நமது சித்தர்கள் அவர்களது வழிபாடுகளில் முந்தைய காலங்களில் பயன்படுத்தி வந்தனர். மேலும் இந்த கரு ஊமத்தை இன் சக்தி 21 பன்றிகளுக்கு சமமாகும்.
குடும்பத்தில் எப்பொழுதும் ஏதேனும் ஒரு பிரச்சனை ஏற்பட்டு கொண்டே இருக்கிறது. ஒரு மன அமைதியே இல்லை. பொருளாதார தட்டுப்பாடும் ஏற்பட்டு கொண்டே இருக்கிறது. இதற்கான தீர்வினை பல ஜோதிடர்களிடம் கேட்டும் அதற்கான பதில் கிடைக்கவில்லை. பல பூஜைகள் செய்தாலும் அதற்கான பலன் கிடைக்கவில்லை என எண்ணுபவர்களாக இருந்தால் இந்த கரு ஊமத்தையை வைத்து ஒரு வழிபாடு ஒன்றை செய்வதன் மூலம் இந்த பிரச்சனைகள் அனைத்தும் அகலும்.
இது போன்ற பிரச்சனைகள் இருப்பவர்கள் அமாவாசை அல்லது பிரதோஷம் நாட்களில் மாலை வேளையில் கரு ஊமத்தையை வெட்டி அதனுள் உள்ள விதைகளை எடுத்து ஒரு விளக்கு போல வைத்துக்கொண்டு அதனுள் வேப்ப எண்ணெய் மற்றும் வெண்கடுகினை போட்டுக்கொள்ள வேண்டும். அதற்கு சிவப்பு நிற திரியினை போட்டு நமது வீட்டின் வாசலில் மற்றவர்கள் பார்க்கும்படி அந்த விளக்கினை ஏற்றி வைக்க வேண்டும்.
இவ்வாறு மற்றவர்கள் பார்க்கும்படி ஏற்றினால் தான் நமது வீடுகளில் உள்ள கண் திருஷ்டி, பில்லி, சூனியம், ஏவல், காத்து கருப்பு போன்ற அனைத்தும் விலகி ஓடும். மேலும் வீட்டில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் நீங்கி ஒரு மகிழ்ச்சிகரமான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும்.