40,000 கூட கட்ட முடியாத மாணவர்கள் எதற்காக மருத்துவக் கல்லூரிக்கு செல்ல வேண்டும் என்ற துரைமுருகனின் பேச்சுக்கு பல தரப்பிலும் கண்டன குரல்கள் எழுந்திருக்கின்றது. இவருக்கு ஆளும் கட்சியான அதிமுக கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. வறுமையை திறமையால் வெல்ல முயற்சிக்கும் மாணவ சமுதாயத்தை மிகவும் அசிங்கமாக பேசி கேவலப்படுத்தி இருக்கிறார் கோமாளி துரைமுருகன்.
இதே துரைமுருகன் தன்னுடைய சட்டக் கல்லூரி படிப்பை முடித்தது புரட்சித் தலைவர் அவர்களின் வள்ளல் குணத்தால் தான் என்பது வரலாறு ஆனாலும் தனக்கு கிடைத்த வாய்ப்பும் சந்தர்ப்பமும், இப்போது இருக்கும் காலத்தில் எந்த மாணவனுக்கும் கிடைக்க கூடாது அது அரசாங்கத்தால் கூட அடிமட்ட குடும்ப மாணவர்களுக்கு கிடைத்துவிடக் கூடாது என்று நினைக்கும் துரைமுருகனின் கெட்ட புத்தி நினைத்தால் கேவலமாக இருக்கின்றது.
மரத்தடியில் வகுப்பு நடத்திய காலம் எல்லாம் மலையேறி மடிக்கணினி வகுப்புகளாக மாறி நோட்டுப்புத்தகம், வண்ண பென்சில்கள், வரலாறு ,புவியியல், வரைபடங்கள் இப்படி எல்லாம் வழங்கி கல்வி ஒருவருக்கு கிடைத்தால் அவர் அனைத்தையும் பெற்றவராவார் சமூகநீதியை மலர வைக்க போராடி வருகின்றது அம்மா வழியிலான எடப்பாடி தலைமையிலான அரசு. அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவர்களாக அவர்கள் உயர்ந்திட 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை கொடுத்து அதன் மூலமாக இந்த வருடம் மட்டும் 113 மருத்துவர்கள் அரசு பள்ளிகளில் இருந்து உருவாகி இருக்கிறார்கள். இந்த பழக்கம் இந்த சமூக நீதி போற்றும் அரசாங்க மற்றும் மாநிலமாக தமிழகத்தை மாற்ற அயராது பாடுபடும் அதிமுக அரசின் பெருமையை கண்டு பொறுக்க முடியாத துரைமுருகன் 40,000 ரூபாய் கட்டணம் கட்ட இயலாத அரசுப் பள்ளி மாணவர்கள் ஏன் மருத்துவக் கல்லூரிக்கு செல்ல வேண்டும் என்று ஏளனமாக பேசி இருப்பது கண்டனத்திற்குரியது.
உழைக்காமல் ஒரு சொட்டு வியர்வையும் வடிக்காமல் கருணாநிதி குடும்பத்தார் எல்லாம் பல நூறு கோடியில் ஏழாம் அறிவு என கோடிகளைக் கொட்டி சினிமா எடுக்கும்போது திறமை உள்ள மாணவர்கள் தங்களுடைய வறுமையை அரசின் உதவியோடு எதிர்த்து நிற்பது குற்றமா? இதற்கு திமுக தரப்பில் பதில் கூறவேண்டும் துரைமுருகனின் நாக்குதான் துருப்பிடித்த திமுகவின் போக்கை காட்டி இருக்கின்றது. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையென்றால் அவர்களை மாணவ சமூகம் மண்டியிட வைக்கும் என்பது சத்தியம் இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.