இந்தச் செடி உங்கள் வீட்டில் இருந்தால் பணக்கஷ்டம் வரவே வராது

0
496

பொதுவாகவே செடிகள் மூலிகைத் தன்மை வாய்ந்தது மட்டுமின்றி சில செடிகள் தெய்வீகத் தன்மையையும் கொண்டுள்ளது.சில செடிகள் தீயசக்திகளை போக்கும் செடிகளாகும் சில செடிகள் அதிர்ஷ்ட செடிகளாகவும் நம் அனைவரின் வீட்டிலும் வளர்க்கப்படுகின்றன.

அந்த வரிசையில் இந்த செடியை உங்கள் வீட்டில் வைத்தால் பணக்கஷ்டம் வரவே வராது என்று கூறப்படுகிறது.

ஆம் அந்தச் செடி எளிய பராமரிப்பிலும் சிறிது நிழலிலும் செழிப்பாக வளர கூடிய பல மூலிகைகள் நிறைந்த கற்பூரவள்ளி செடி ஆகும். இந்தச் செடி செழிப்பாக வளர வளர நம் குடும்பமும் செழிப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

நம்முடைய வீட்டிலும், தொழில் செய்யும் இடத்திலும், பணம் சேருவதற்காக எத்தனையோ பரிகாரங்களை, எத்தனையோ விதங்களில் செய்து பார்க்கின்றோம். சில பேருக்கு சில பரிகாரங்கள் பலன் அளிக்கும். சில பேருக்கு எந்த பரிகாரங்களும் பலன் கொடுக்காது. இப்படி இருக்கும் பட்சத்தில், அவர்கள் இதுபோன்ற அதிர்ஷ்ட செடிகளை வைத்து பலன்களை எதிர்பார்க்கலாம்.

இந்தச் செடி உங்கள் வீட்டில் இருந்தால் பணக்கஷ்டம் வரவே வராது

கற்பூரவள்ளி செடிக்கு மருத்துவ குணம் எவ்வளவு அதிகமாக இருக்கின்றதோ, அதே அளவிற்கு அந்த வாசத்திற்கு எந்த ஒரு கெட்ட சக்தியும் நெருங்காது என்றும் சொல்லப்படுகிறது. கண்ணுக்குத் தெரியாத ஏதாவது தீய சக்தி இருந்தால் கூட, இந்த வாசத்திற்கு தெறித்து ஓடும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

அதாவது, நன்றாக லாபத்தை தந்து கொண்டிருந்த தொழில் திடீரென்று முடக்கம் அடைந்து விட்டாலும், வீட்டில் கண்ணுக்கு தெரியாத கெட்ட சக்திகளின் மூலம், கண் திருஷ்டியின் மூலம், பிரச்சினைகள் இருந்தாலும், அதை சரி செய்ய சாம்பிராணி தூபம் போடுவதை நம் முன்னொரு காலத்தில் இருந்து வழக்கமாக வைத்துள்ளோம்.

கற்பூரவல்லி செடியில் இருந்து சில இலைகளை பறித்து, நன்றாக உலர வைத்து, பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும். சாம்பிராணி தூபம் போடும் போது, அதில் ஒரு ஸ்பூன் இந்த கற்பூரவள்ளி இலை பொடியையும் சேர்த்து, அந்தப் புகையை வீடு மற்றும் தொழில் செய்யும் அனைத்து பகுதிகளிலும் காண்பித்து வர, பல நாள் தீராத இருந்த பல பிரச்சனைகளும் தீரும்.

குறிப்பாக பண கஷ்டம், வீண் விரையம், வர வேண்டிய கடன் தொகை வரவில்லை, தொழில் முடக்கம் இப்படிப்பட்ட பணரீதியான பலப் பிரச்சனைகளுக்கு சுலபமான தீர்வு தரும் என நம்பப்படுகிறது

Previous articleஇவர் தான் அந்த அதிசய மனிதர்! ரகசியத்தை வெளிப்படுத்திய ராமதாஸ்
Next articleகொரோனாவுக்கு தடுப்பூசி! அமைச்சர் வெளியிட்ட மகிழ்ச்சியான தகவல்