TVK BJP: தமிழக வெற்றிக் கழகம் ஒன்றரை வயதையே எட்டியுள்ள நிலையில், அதன் வளர்ச்சி அசுர வேகத்தை எட்டியுள்ளது. திராவிட கட்சிகளுக்கு மாற்றாக தவெக உருவெடுத்துள்ளதாக தொண்டர்கள் கூறி வந்தனர். இந்நிலையில் கரூரில் நடந்த சம்பவம் விஜய்யின் அரசியல் வாழ்க்கைக்கு திருப்பு முனையாக அமைந்ததுள்ளது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட பாஜகவும், அதிமுகவும், விஜய்க்கு உதவுவதாக கூறி, ஒரு உண்மை கண்டறியும் குழுவையும் அமைத்துள்ளது.
திமுகவை ஒழிக்க வேண்டுமென்ற நோக்கில் உள்ள பாஜக, இந்த குழு கண்டறியும் அறிக்கையில் திமுகவிற்க்கு எதிராக ஆதாரங்களை சேகரித்துள்ளதாகவும் தகவல் வெளிவந்தது. இந்நிலையில்அதிமுக-தவெக கூட்டணியை உறுதி செய்வது போல, பிள்ளையார் சுழி போட்டாச்சு என்று இபிஎஸ் கூறியிருந்தார். இதனை தொடர்ந்து அதிமுக, பாஜக கூட்டணியிலிருந்து விலகினால், தவெக அதிமுகவில் இணையும் என்று விஜய் கூறியதாக அரசியல் களத்தில் பேச்சு நிலவுகிறது.
இதையடுத்து, விஜய் பாஜக கூட்டணிக்கு சம்மதிக்கவில்லை என்றால், உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கை விஜய்க்கு எதிராகவே இருக்கும் என்று பாஜக கூறியதாகவும் சொல்லப்படுகிறது. ஏற்கனவே, நீதிமன்றத்தின் கடுமையான கண்டனத்திற்கு விஜய் ஆளானதால், இந்த வழக்கு விஜய்க்கு எதிராக திரும்பும் அபாயம் உள்ளது.
அதுமட்டுமல்லாமல், விஜய் மீது தான் தவறு உள்ளது என்று நிரூபிப்பதற்காக திமுக தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் விஜய் பாஜக கூட்டணிக்கு சம்மதிக்கவில்லை என்றால், இரண்டு பக்கமும் விஜய்க்கு ஆபத்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த இக்கட்டான சூழலில் விஜய், தனது கொள்கை எதிரியான பாஜக உடன் கூட்டணி அமைப்பதை தவிர வேறு வழியே இல்லை என்றும் அரசியல் ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.