
ADMK TVK: ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக செயலிழந்து காணப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி தலைவர் பொறுப்பை அதிமுக ஏற்றதிலிருந்தே அனைத்து தேர்தல்களிலும் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. மேலும் முக்கிய முகங்களாக அறியப்பட்டு வந்த அதிமுக தலைவர்கள் கட்சியிலிருந்து விலகியது இதற்கு முக்கிய காரணமாகும். இதனை சரிப்படுத்தி அதிமுகவை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டுமென இபிஎஸ் முயன்று வருகிறார்.
அதற்காக புதிய கட்சியாக உதயமாகியுள்ள தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைக்க ஆர்வம் காட்டி வருவது வெளிப்படையாக தெரிகிறது. விஜய்க்கு ஆதரவு பெருகி வரும் காரணத்தால் கரூர் சம்பவத்தில் விஜய் மீது சில தவறுகள் இருந்தாலும், அதனை பொருட்படுத்தாமல், தவறு முழுக்க திமுக அரசு மீது தான் என்று கூறி வருகிறார். இபிஎஸ் விஜய்யின் குரலாக சட்டசபையிலும் ஒலித்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் விஜய் இதற்கு சம்மதிப்பதாக தெரியவில்லை.
ஏனென்றால், விஜய் கட்சி ஆரம்பித்தது முதலே எங்கள் தலைமையில் தான் கூட்டணி, நான் தான் முதல்வர் வேட்பாளர் என்று கூறி வருகிறார். இப்படியிருக்க எவ்வளவு பெரிய திராவிட கட்சியாக இருந்தாலும் அதற்கு கீழ் கூட்டணி அமைக்க விஜய்க்கு விருப்பமில்லை. இதனால் விஜய்க்கும் அவரது கட்சிக்கும் உண்டான தனித்தன்மை பறிபோய் விடும் என்று விஜய் நினைப்பதாக தவெக வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும் ஏற்கனவே அதிமுக பாஜகவின் அடிமையாக இருக்கிறது என்று பலரும் கூறி வர, தவெக அதிமுக கூட்டணியில் இணைந்தால், அதனை பி டீம் என்று மக்கள் விமர்சித்து விடுவார்களோ என்ற அச்சமும் விஜய்க்கு உள்ளது.