Breaking News

இப்படி ஆடினால் எங்கு பந்து போடுவோம்!!  குஜராத் அணி வீரர் டுவீட்!!

If we play like this, where will we throw the ball!! Gujarat team player tweet!!
இப்படி ஆடினால் எங்கு பந்து போடுவோம்!!  குஜராத் அணி வீரர் டுவீட்!!
நேற்றைய போட்டியில் மும்பை அணி வீரர் சூர்யகுமார் யாதவ் விளையாடிய ஆட்டத்தை பார்த்து குஜராத் டைட்டன்ஸ் வீரர் ஆட்டத்தை பாராட்டி டுவீட் செய்துள்ளார்.
நேற்று மும்பையில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் விளையாடியது. இந்த போட்டியில் பெங்களூரு அணி நிர்ணயித்த 200 ரன்கள் இலக்கை எளிமையாக சேஸ் செய்து மும்பை அணி வெற்றி பெற்றது. இந்த இலக்கை சேஸ் செய்ய மும்பை அணி வீரர் சூர்யகுமார் யாதவ் அவர்களின் அதிரடியான ஆட்டமே காரணம்.
இதையடுத்து நேற்று நடந்த போட்டியில் மும்பை அணி வீரர் சூரியகுமார் யாதவ் அவர்களின் ஆட்டத்தை பார்த்து வாழ்த்து தெரிவித்த குஜராத் டைட்டன்ஸ் அணியின் நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் ரஷித் கான் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் “இப்படி ஆடினால் பவுலர்கள் எங்கு பந்து போடுவார்கள்” என்று கேள்வி எழுப்பினார். இதையடுத்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் டெல்லி அணியின் பயிற்சியாளருமான கங்குலி அவர்கள் சூர்யகுமார் யாதவ் அவர்களின் நேற்றைய ஆட்டத்தை பார்த்து “சூரியா பேட்டிங்கை பார்த்தால் கம்பியூட்டரில் பேட்டிங் செய்வது போல இருக்கின்றது” என்று டுவீட் செய்துள்ளார்.