இங்கு பெண்கள் வாங்கினால் ஒரு ரூபாய் தானாம்! இவர்களுக்கு இலவசம்! கலக்கும் மாநகராட்சி!

Photo of author

By Hasini

இங்கு பெண்கள் வாங்கினால் ஒரு ரூபாய் தானாம்! இவர்களுக்கு இலவசம்! கலக்கும் மாநகராட்சி!

இயற்கை உரங்களை விவசாயிகள் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என மதுரை மாநகராட்சி அதிரடியாக தெரிவித்துள்ளது. நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் விவசாயத்தை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவும், விவசாயிகளின் சுமைகளை குறைக்க வேண்டும் என்பதற்காகவும் அரசு பல்வேறு நலத்திட்டங்களையும், நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

அந்த வகையில் மதுரை மாநகராட்சி இன்று அதிரடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இயற்கை உரங்களை விவசாயிகள் இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. விவசாயிகள், விவசாயிகளுக்கான சான்றுகள் அல்லது விவசாய அடையாள அட்டைகள் இருந்தால் அவற்றை காண்பித்தாலும் இலவசமாக உரங்கள் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

மேலும் மகளிர் சுய உதவிக்குழுவினர் இயற்கை உரத்தை ஒரு கிலோவிற்கு ரூபாய் மட்டும் கொடுத்து பெற்றுக் கொள்ளலாம் என்றும் அதிரடி தெரிவித்துள்ளது. ஒரு மெட்ரிக் டன் உரம் ஏற்றுவதற்கு கூலியாக 100 ரூபாய் மட்டும் செலுத்தினால் போதும் எனவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நேற்றும் இதே போல் விலங்குகளின் கழிவுகள் மற்றும் தேவையற்றவற்றை தெருவில் கொட்டுவோருக்கும் நூதன முறையில் தண்டனையும், அபராதாமும் விதிக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்த அறிவிப்புகள் மக்கள் அனைவரையும் கவரும் வண்ணம் இருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது.