பெண்கள் தாலியுடன் இதை சேர்த்து அணிந்தால் பல மகிமைகள் உண்டாகும்..!!

Photo of author

By Janani

பெண்கள் தாலியுடன் இதை சேர்த்து அணிந்தால் பல மகிமைகள் உண்டாகும்..!!

Janani

ஸ்ரீ சக்கரம் என்பதை தன்னுடைய கைப்பட எந்திரபூர்வமாக உருவாக்கியவர் யார் என்றால் சிவபெருமான். இந்த ஸ்ரீ சக்கரம் எந்த ஸ்லோகத்திற்கு உட்பட்டது என்றால் திருமாலே தன்னுடைய மனைவியை வர்ணித்த சௌந்தர்ய நகரியினுடைய 22 ஆவது ஸ்லோகத்திற்குரிய எந்திரம்.

அதாவது அம்பிகையின் உடைய ஒவ்வொரு அவையமும் ஒரு எந்திரமாக அவர் உருவாக்கம் செய்கிறார்.
அந்த உருவாக்கத்தினுடைய அடிப்படையில் அதை கொண்டு வந்து பூமியில் சேர்த்த பிராப்தம் ஆதிசங்கரரை சேரும். இந்த ஸ்ரீ சக்கரம் முதல் முதலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட இடமாக காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் தான் இருக்கிறது.

ஒரு வீட்டில் கர்மாவினால் நோய், நொடி, கடன், சண்டை, பிரச்சனை இதெல்லாம் இருக்கிறது என்றால் அது கர்மாவினுடைய வெளிப்பாடு. அதேபோன்று ஒரு வீட்டில் சந்திரனின் பலம் இல்லை என்றால் அந்த வீட்டில் செல்வ வளம் என்பது இருக்காது. அப்பொழுது சந்திரனை உச்சம் படுத்தக்கூடிய வாய்ப்பு தான் இந்த ஸ்ரீ சக்கரம்.

யார் ஒருவருடைய வீட்டில் இந்த ஸ்ரீ சக்கரம் இருக்கிறதோ அந்த வீட்டில் அம்பாள் எவ்வாறு சிரித்த முகத்துடன் இருக்கிறாரோ அதேப் போன்று, அந்த குடும்பத்தில் உள்ள அனைவரது முகமும் சிரித்த முகத்துடன் இருக்கும். அதேபோன்று பொன், பொருள், நவநிதி ஆகியவற்றிற்கு குறைவே இருக்காது.
குறிப்பாக நோய் என்பதே இருக்காது.

இந்த ஸ்ரீ சக்கரத்தை வெள்ளிக்கிழமை நாட்களில் மகாலட்சுமி படத்துடன் வைத்து பிரேம் செய்து கொள்ள வேண்டும். ஏனென்றால் இந்த ஸ்ரீ சக்கரத்தை தனியாக வைத்து வழிபட்டால் அதற்கு என தனியான பூஜை சம்பிரதாயங்களை சரியாக செய்ய வேண்டும்.

எனவேதான் இந்த ஸ்ரீசக்கரத்தை லட்சுமி தாயாருடன் சேர்த்து வைக்கும் பொழுது அந்த லட்சுமி தேவியின் கடாட்சமும், சந்திரனின் அருளும் நமக்கு முழுமையாக கிடைக்கும். ஸ்ரீ சக்கரம் இருக்கக்கூடிய வீடுகளில் செல்வ வளம், மன அமைதி, நோயற்ற வாழ்வு ஆகியவை இருக்கும்.

இந்த ஸ்ரீ சக்கரம் ஆனது வெள்ளி அல்லது தங்கத்தில் இருந்தால் மிகுந்த சிறப்பை தரும். இந்த ஸ்ரீ சக்கரத்தை தனியாக வைத்து வழிபட்டால் அதற்கு என தனியாக பால், பழம், பிரசாதம் என தினமும் படைத்து வழிபட வேண்டும். இல்லை என்றால் இந்த ஸ்ரீ சக்கரத்தை பிரேம் போட்டு வைத்து வழிபட்டால் வாரத்திற்கு ஒருமுறை வழிபட்டால் போதும்.

இந்த ஸ்ரீ சக்கரம் ஆனது காசி அன்னபூரணி, சமயபுர தாயின் திருமாங்கல்யம், திருவானைக்காவல், திருவாரூர் போன்ற ஊர்களில் உள்ள ஆலயங்களில் இந்த ஸ்ரீ சக்கரத்தை நாம் காணலாம். இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த ஸ்ரீ சக்கரம் இருக்கக்கூடிய இடத்தில் செல்வ வளம், மகிழ்ச்சி, மன அமைதி, குடும்ப ஒற்றுமை ஆகியவற்றை ஏற்படுத்தும்.

இந்த ஸ்ரீ சக்கரத்தை குறிப்பாக பெண்கள், ஒரு டாலர் வடிவத்திலோ அல்லது திருமாங்கல்யத்துடனோ சேர்த்து அணிந்து கொள்ளும் பொழுது கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். எனவே இந்த ஸ்ரீ சக்கரத்தை எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் பெண்கள் அணிந்து கொள்ளலாம்.

இந்த ஸ்ரீ சக்கரத்திற்கு எந்த ஒரு தீட்டும் கிடையாது. எனவே அனைத்து நாட்களிலும் இந்த ஸ்ரீசக்கரத்தை நாம் அணிந்து கொண்டு இருக்கலாம். செல்வத்தை சேர்க்கும் பண்பு பெண்களிடம் மட்டும்தான் அதிகம் இருக்கும். எனவே இந்த ஸ்ரீ சக்கரத்தை பெண்கள் அணிந்து கொள்ளும் பொழுது செல்வ வளமும் அதிகரிக்கும்.