இனி பாம்பு கடித்தால் கட்டாயம் அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும்!! வெளியான முக்கிய தகவல்!!

0
102
If you are bitten by a snake, you must inform the government!! Important information released!!
If you are bitten by a snake, you must inform the government!! Important information released!!

TN Government: தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது புது வகையான திட்டத்தை கொண்டு வந்துள்ளது. பாம்பு கடியை அறிவிக்க கூடிய நோயாக அறிவித்துள்ளது.

பாம்பு கடி என்பது பாம்பின் பற்களால் மனித தோலை கடிப்பதன் மூலம் ஏற்படும் காயம் ஆகும். பாம்பு முக்கியமாக எப்போது கடிக்கும் என்றால் தனக்கு தேவையான இரையை பிடிக்க மற்றும் தன்னை பாதுகாத்துக்கொள்ள கடிக்கும். பாம்பு கடி உயிரை பறிக்க கூடிய நிலைக்கு கொண்டு செல்லும். இந்த நிலையில் தமிழ்நாடு அரசு பொது சுகாதாரச் சட்டம் 1939-ன் கீழ்  பாம்பு கடியை அறிவிக்கை செய்யக் கூடிய நோயாக அறிவித்துள்ளது.

இதற்கு முக்கிய அறிவிப்பை தமிழ்நாடு அரசிதழில் நவம்பர் 6, 2024 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாம்பு கடியை அறிவிக்கை செய்ய முக்கிய காரணம் தரவு சேகரிப்பு, மருத்துவ உட்கட்டமைப்பு, பாம்பு கடியால் ஏற்படும் இறப்புகள் மற்றும் அவற்றிற்கான மருந்துகளும் மேம்படுத்துவதன் மூலம் மக்களின் இறப்புகளை தவிர்க்க முடியும் என தொடங்கப்பட்டு உள்ளது.

இது மட்டும் அல்லாமல் பாம்பு கடித்த மக்கள் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் எவ்வளவு சேர்ந்துள்ளார்கள் என அனைத்து தரவுகளும் அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம். மேலும் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட (NAPSE) மூலம் 2030 ஆம் ஆண்டுக்குள் பாம்பு கடி இறப்புகளை பாதியாக குறைக்கப்படும் என இந்த திட்டத்தை உருவாக்கி உள்ளது.

Previous articleஇனி கே எல் ராகுல் சர்ப்ராஸ் கான் இல்லை இவர்தான்!! சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இளம் வீரர்!!
Next articleஇந்திய அணி பாகிஸ்தானில் விளையாட வாய்ப்பில்லை!! திட்டவட்டமான பதிலை வெளியிட்ட பிசிசிஐ!!