சனீஸ்வரர் என்ற பெயரை கேட்டாலே ஒரு விதமான பயம்தான் அனைவருக்கும் தோன்றும். இதனால் பய பக்தியுடன் தான் அவரை வணங்கவும் செய்வோம். சனிபகவான் என்பவர் கோபக்காரர் தான், அதே சமயம் அவர் மற்ற கிரகங்களை விட மிகவும் பாசக்காரரும் கூட. கிரகங்களிலேயே சனி பகவான் மிகவும் முக்கியமானவராகவும், நீதி அரசராகவும் விளங்குகிறார்.
சனிபகவான் நல்லவர்களுக்கு நல்லவராகவும், கெட்டவர்களுக்கு கெட்டவர்களாகவும் இருப்பது தான் உண்மை. சனிபகவான் ஒரு ராசியை கடக்க கிட்டத்தட்ட 2 1/2 ஆண்டுகளை எடுத்துக் கொள்கிறார். கிரகங்களிலேயே மெதுவாக நகரும் கிரகமும் சனி கிரகம் தான். சனிபகவானை பார்த்து யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை.
நமக்கு பாடம் கற்பிக்கும் ஆசிரியரே அவர் தான். எனவே அவரைப் பார்த்து அச்சம் கொள்ள தேவையில்லை. சரியாக நமது கடமையை செய்து வந்தோம் என்றால் எந்தவித பயமும் தேவையில்லை.அதேபோன்றுதான் சனி பகவானிடம் நாம் நேர்மையாக இருந்தால் போதும், அவர் நம்மை ஒன்றும் செய்ய மாட்டார்.
“சனியைப் போல் கொடுப்பாறும், சனியைப் போல் கெடுப்பாறும் எவருமில்லை” என்பது பழமொழி. இதிலிருந்து தெரிகிறது சனீஸ்வரர் கொடுப்பதில் மிகச் சிறந்த வல்லவர் என்று. அதே போன்று சனிபகவான் தனது கடமையிலிருந்து சிறிதும் தவறாதவர் ஆவார். இத்தகைய சனி பகவானுக்கு மிகவும் பிடித்த மற்றும் பிடிக்காத செயல்களை ஒருவர் செய்யும் பொழுது, அவர் அந்த மனிதனை உடனே பிடித்துக் கொள்வார்.
1. சனிபகவானுக்கு விளக்கு ஏற்றப்படாமல் இருள் சூழ்ந்து இருக்கக்கூடிய இடங்களையும், எப்பொழுதும் அமங்கல சொற்களை பேசும் நபர்களையும் சனிக்கு பிடிக்காது. தனது தீய பார்வையால் அவர்களை திரும்பிப் பார்ப்பார்.
2. பொய், களவு, சூது, வாது இது போன்ற செயல்களை செய்பவர்களுக்கு தண்டனை தர சனிபகவானுக்கு மிகவும் பிடிக்கும்.
3. சுத்தம் இல்லாத இடத்தில் சூனியம் குடி இருக்குமே தவிர, திருமகள் குடியிருக்க மாட்டாள். ஆனால் சனி பகவானுக்கு அந்த இடங்கள் தான் மிகவும் பிடிக்கும். இதுபோன்ற சுத்தம் இல்லாத இடத்தில் வசிப்பவர்களுக்கு தீராத துன்பத்தை சனி பகவான் தருவார்.
4. மண் ஆசை, பொன் ஆசை, பெண் ஆசை கொண்டு மற்றவர்களை வஞ்சித்து வாழ்பவர்களை கூட, சனி பகவான் வாழ விடாமல் செய்வார்.
5. அன்றாடம் சுத்தம் செய்யாத வீட்டிலும், அனுதினமும் அழுகுரல் கேட்கும் இல்லத்திலும் சனிபகவான் நீங்காமல் நிரந்தரமாக குடி கொள்வார்.
6. தாய்க்கு அடங்காத பெண்களும், தகப்பனுக்கு அடங்காத ஆண்களும், உடன் பிறந்தோரை வஞ்சிக்கும் துரோகிகள் போன்றோரை சனிபகவான் கால நேரம் பார்த்து கண்டிப்பாக தண்டிப்பார்.
7. ஈரமான துணிகளை உடுத்துபவர்களை சனி பகவானுக்கு மிகவும் பிடிக்கும். உடனே அவர்களைப் பற்றிக் கொள்வார். ஈரம் சொட்ட சொட்ட ஒருவர் வீட்டின் உள்ளே சென்றால் அவர்களின் மீது சனி பகவானுக்கு பாசம் அதிகரிக்கும், இதனால் அவர்களை உடனே பிடித்துக் கொள்வார்.
8. முதல் நாள் உடுத்திய உடையை மறுநாளும் பயன்படுத்துபவர்களை சனி பகவானுக்கு மிகவும் பிடிக்கும். அதேபோன்று குளிக்காமல் அசுத்தமாக இருந்தாலும், தலைவாரி கொள்ளாமல் இருந்தாலும் சனிபகவானுக்கு மிகவும் பிடிக்கும்.