இதை 7 செய்தால் இனி முகத்தில் ஒரு பரு கூட வரவே வராது!!
முகத்தில் பருக்கள் இருந்தால் அது முகத்தின் பொலிவையே கெடுத்துவிடும். அப்படி முக அழகைக் கெடுக்கும் பருக்களை இருந்த இடம் தெரியாமல் விரட்ட சிறு சிறு மாற்றங்களை செய்தாலே போதும். அது என்ன என்பதை பற்றி பார்க்கலாம்.
பருக்கள் உண்டாகப் பல காரணங்கள் இருக்கின்றன. தலையில் பொடுகுத் தொல்லை அதிகமாக இருந்தாலும் அதன் வெளிப்பாடாக முகத்தில் பருக்கள் தோன்றும். வெளியில் இருந்து தூசுக்கள், மாசுக்கள் சருமத் துளைகளுக்குள் செல்வதனாலும் பருக்கள் உண்டாகும்.
முதலில் சருமத்தில் உள்ள எண்ணெய் மூலக்கூறுகள் அதிகமாக இருக்கும். அதனுடன் அழகு சார்ந்த பொருட்களான மாய்ஸ்டரைசரிலும் எண்ணெய் மூலக்கூறு உள்ளதால் இரண்டும் சேரும்போது முகப்பரு வரும். ஆகையால் செயற்கையாக தயாரிக்கப்படும் அழகு சாதன பொருட்களை தவிர்க்க வேண்டும்.
சருமத்தில் தேங்கியுள்ள அழுக்குகள் மூலம் பருக்கள் வர காரணம். ஆகையால் முகத்தை தினமும் வெதுவெதுப்பான நீரைக் கொண்டு அடிக்கடி சுத்தம் செய்வதன் மூலமாக பருக்கள் வராமல் தவிர்க்க முடியும்
முகத்தை கடுமையாக தேய்ப்பதன் மூலமாகவும் பருக்கள் உருவாகும். இதைப் போன்று முகத்தில் இருக்கும் பருவை அடிக்கடி தொட்டுப் பார்ப்பதன் மூலமாகவும், முகப்பருக்களை உடைப்பதன் மூலமாகவும் அதிகப்படியான பருக்கள் உருவாகும்.
அடிக்கடி கைகளினால் முகத்தை தொடுவதன் மூலமாகவும் பருக்கள் உருவாகும். இவ்வாறு செய்யாமல் இருக்கையில் முகப்பரு வராமல் தடுக்கலாம். அடுத்து மன அழுத்தம், ஹார்மோன்களின் சமநிலையை மாற்றி முகப்பருக்களை மிக மோசமாக மாற்றுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
இதுபோன்ற சிறு சிறு தவறுகளை மாற்றிக் கொள்ளும் பொழுது முகப்பரு வராமல் கட்டாயம் தவிர்க்க முடியும். இதை செய்து பாருங்கள் நீங்களும் முகப்பரு இல்லாமல் சந்தோஷமாக இருக்கலாம்.