குலதெய்வ வழிபாட்டை இப்படி செய்தால் உங்களுடைய வம்சமே செழிப்பாய் இருக்கும்..!!

Photo of author

By Janani

குலதெய்வ வழிபாட்டை இப்படி செய்தால் உங்களுடைய வம்சமே செழிப்பாய் இருக்கும்..!!

Janani

ஒவ்வொரு குடும்பத்திற்கும் அவர்களது குலதெய்வம் தான் ஆணிவேர். மற்ற தெய்வங்களின் அருள் இருக்கிறதோ இல்லையோ ஆனால் குலதெய்வத்தின் அருள் என்பது அனைத்து குடும்பங்களுக்கும் மிகவும் முக்கியம். குலதெய்வத்தின் அருள் இருந்தால் மட்டுமே அந்த குடும்பத்தில் எந்தவித பிரச்சனைகளும் இல்லாமல் குடும்பம் சுபிட்சமாக இருக்கும்.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த குலதெய்வம் ஒரு சிலருக்கு ஆண் தெய்வமாக இருக்கும், ஒரு சிலருக்கு பெண் தெய்வமாக இருக்கும். அதே போன்று ஒரு சிலருக்கு ஆண் பெண் இருவரும் சேர்ந்த தெய்வமாக இருக்கும். சிலருக்கு உருவ வழிபாடு இருக்காது. அதாவது ஒரு பெட்டியை குலதெய்வமாக நினைத்தோ அல்லது ஒரு மரம், கல், பானை, கிணறு இதுபோன்று உருவம் இல்லாத குலதெய்வமும் ஒரு சிலருக்கு இருக்கும்.

ஆனால் ஒரு சிலர் குலதெய்வமே எது என்று தெரியாமல் திருப்பதி வெங்கடாஜலபதியை தான் குலதெய்வமாக நினைத்து வழிபட்டு வருகிறோம் அல்லது திருத்தணி முருகரை தான் குலதெய்வமாக நினைத்து வழிபட்டு வருகிறோம் என்று கூறுவோரும் உள்ளனர். இதுபோன்று குலதெய்வம் தெரியாதவர்கள் அவர்களுடைய ஜாதக கட்டத்தில் ஐந்தாம் இடத்தில் இருக்கும் லக்னத்தை அடிப்படையாகக் கொண்டு குலதெய்வத்தை கண்டறியலாம்.

இல்லையென்றால் பிரசன்ன முறையில் குலதெய்வத்தை கண்டறியலாம். குலதெய்வம் என்பது மிகவும் முக்கியமான ஒரு தெய்வம். எனவே அவரவர் குலதெய்வம் எது என்று சரியாக அறிந்து, சரியான முறையில் வழிபாட்டை மேற்கொள்வது என்பதும் மிகவும் முக்கியம்.

உங்களுடைய குலதெய்வம் ஆண் தெய்வமாக இருந்தால் அமாவாசை நாட்களிலும், பெண் தெய்வமாக இருந்தால் பௌர்ணமி நாட்களிலும், ஆண் பெண் இருவரும் சேர்ந்த தெய்வம் என்றால் ஒரு முறை அமாவாசை நாளிலும், மறுமுறை பௌர்ணமி நாளிலும் சென்று வழிபட வேண்டும்.

இந்த நாட்களில் உங்களது குலதெய்வ கோவிலுக்கு சென்று ஐந்து தேங்காய் உடைக்க வேண்டும். ஐந்து தேங்காயை உடைத்தால் பத்து மூடிகள் கிடைக்கும். அதில் ஒரு மூடியை தானமாக கொடுத்து விட வேண்டும். மீதம் இருக்கக்கூடிய ஒன்பது மூடி தேங்காயில் சுத்தமான பசு நெய் ஊற்றி, பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். அதனுடன் வெற்றிலை, பாக்கு, எலுமிச்சம்பழம் மற்றும் 101 ரூபாய் காணிக்கை ஆகியவற்றை வைத்து உங்களுடைய குலதெய்வத்தை வழிபாடு செய்து விட்டு வர வேண்டும்.

இது போன்ற முறையில் உங்களுடைய குலதெய்வ கோவிலில் தீபத்தை ஏற்றி வழிபாடு செய்து விட்டு, வீட்டிற்கு வந்து பாருங்கள் நிச்சயம் நல்ல மாற்றம் கிடைக்கும். குல தெய்வத்தை எப்பொழுதும் மறக்க கூடாது. எனவே வருடத்திற்கு ஒரு முறையாவது உங்களுடைய குலதெய்வ கோவிலுக்கு கண்டிப்பாக செல்ல வேண்டும்.

உங்களால் முடிந்த அளவிற்கு உங்களுடைய குலதெய்வ கோவிலுக்கு தேவையான பூஜை பொருட்களை வாங்கிக் கொடுப்பது, அன்னதானம் செய்வது, உங்களால் முடிந்த காணிக்கையை கொடுப்பது இதுபோன்ற செயல்களை செய்து பாருங்கள் நிச்சயமாக உங்களுடைய வம்சம் செழிப்பாக இருக்கும்.