கடன் கட்டவில்லையென்றால் ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க முடியாது?

Photo of author

By Jeevitha

Ration Card: உத்திரபிரதேசத்தில் கடனை திருப்பி செலுத்தாவிட்டால் ரேஷன் கார்டு பறிமுதல் செய்யப்படும் என வெளியான அதிர்ச்சி தகவல்.

இந்தியாவில் மக்கள் நலனுக்காக மாநில மற்றும் மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றன. இந்த நிலையில் ரேஷன் கடைகள் மூலம் உணவு பொருட்கள் மிக குறைந்த விலையில் கிடைப்பதால் மக்களுக்கு மிகவும் உதவியாக உள்ளது. இது மட்டும் அல்லாமல் பொங்கல், தீபாவளி என பண்டிகை காலங்களில் மக்களுக்கு இலவசமாக வேட்டி, சேலை, கரும்பு என கொடுத்து மக்களுக்கு உதவி செய்கிறது.

இதுமட்டும் அல்லாமல் ரேஷன் அட்டை உணவு பொருட்களுக்கு வாங்குவதற்கு மட்டும் என்ற நிலை மாறி பல்வேறு சான்றிதழ்கள் பெறுவதற்கான முக்கியமான அரசு ஆவணமாக செயல்பட்டு வருகிறது. ரேஷன் கார்டுகள் அனைத்தும் தமிழகத்தில் ஸ்மார்ட் கார்டுகளில் மாற்றம் அடைந்துள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் ரேஷன் கார்டு குறித்து ஒரு தகவல் உத்திரபிரதேசத்தில் வெளியானது. அதில் மக்கள் கடன் வாங்கி திருப்பி செலுத்தாவிட்டால் ரேஷன் கார்டு பறிமுதல் செய்யப்படும் என கூறி இருந்தது. அது என்னவென்றால் உத்திரபிரதேசத்தில் ஒரு சிறு நிதி ஏஜென்ட் ஒருவர் கடன் வாங்கி திருப்பி செலுத்தாவிட்டால் உங்களின் ரேஷன் கார்டு பறிமுதல் செய்யப்படும் என கூறினார்.

இதனால் நீங்கள் எந்த ஒரு அரசு சலுகையும் வாங்க முடியாது என கூறியுள்ளார். இந்த செய்தி உத்திரபிரதேசத்தில் அச்சத்தை ஏற்படுத்தி இணையம் மூலம் வெளியாகியுள்ளன.  ஆனால் யாரும் இதை நம்ப வேண்டாம். இந்தியாவில் இது போன்று எந்த ஒரு சட்டமும் அரசு அறிவிக்கவில்லை. ரேஷன் கார்டுக்கும் நீங்கள் வாங்கிய கடனுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. நீங்கள் கடனை சரியாக செலுத்தாவிட்டாலும் ரேஷன் கடைகளில் இருந்து பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். இது போன்ற பொய்யான தகவலை கூறுபவர்கள் மீது புகார் அளியுங்கள்.