தெய்வ பக்தி இருந்தால் வீட்டிலேயே தியானம் செய்யலாமே? பிரதமர் மோடியை விமர்சனம் செய்த காங்கிரஸ் தலைவர்! 

Photo of author

By Sakthi

தெய்வ பக்தி இருந்தால் வீட்டிலேயே தியானம் செய்யலாமே? பிரதமர் மோடியை விமர்சனம் செய்த காங்கிரஸ் தலைவர்!
பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு தெய்வ பக்தி இருந்தால் அவர் வீட்டிலேயே தியானம் செய்யலாமே எதற்கு இப்படி செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவர்கள் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் இன்றுடன்(ஜுன்1) முடியும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தொடர்ந்து 45 மணிநேர தியானத்தில் ஈடுபடப் போவதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் தமிழ்நாட்டுக்கு வந்து கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் மூன்று நாட்கள் தியானம் மேற்கொண்டு வருகிறார்.
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தியானம் செய்வதை அடுத்து அங்கு பாதுகாப்பு பணிக்காக பல போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் மூன்று நாட்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டு இருக்கின்றது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவர்கள் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பற்றி விமர்சனம் செய்துள்ளார்.
இது குறித்து பேசிய காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவர்கள் “அரசியலையும் சரி மதத்தையும் சரி எப்பொழுதும் இணைக்கவே கூடாது. இவை இரண்டும் தனித்தனியாகத் தான் இருக்க வேண்டும்.
ஒரு மதத்தை சேர்ந்தவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். இன்னொரு மதத்தை சேர்ந்தவர்கள் உங்களுக்கு எதிராக இருப்பார்கள். இதை காரணமாக வைத்து மதத்தையும் அரசியலையும் ஒன்றாக இணைப்பது தவறான விஷயம்.
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தற்பொழுது கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் தியானம் செய்து வருகிறார். கடவுள் மீது பக்தி இருந்தால் வீட்டிலேயே தியானம் செய்யலாமே. வீட்டிலேயே 45 மணி நேரம் தியானம் செய்யலாமே. கன்னியாகுமரி செல்ல வேண்டிய அவசியம் என்ன?
பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பாதுகாப்பு பணிக்காக பத்தாயிரம் காவல் துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சுற்றுலாச் செல்லும் மக்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. எதற்கு இந்த நாடகம்?” என்று கூறியுள்ளார்.