சுற்றுலா: ஐஆர்சிடிசி என்ற பொது நிறுவனம் கன்னியாகுமரி-ராமேஸ்வரம்-மதுரை நகரங்களில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களுக்குச் செல்ல ரூ.8500 -இல் சுற்றுலா பேக்கேஜ் ஒன்றை வழங்குகிறது.
ரயில்வே துறை ஒரு சிறப்பான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது ரயில்வே துறையின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனமான ஐஆர்சிடிசி சில முக்கிய நகரங்களுக்கு செல்ல ஒரு சிறப்பு சுற்றுலா திட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த திட்டத்தின் பேக்கேஜ் எவ்வளவு இருக்கும் என்பதையும் தெரிவித்துள்ளது.
இந்த டூர் பேக்கேஜில் உணவு மற்றும் தங்குமிட வசதிகளுடன் பயணிகள் செல்ல ஏற்படுத்தியுள்ளது. எந்தெந்த ஊர்களுக்கு செல்லலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது. இந்த திட்டம் கன்னியாகுமரி ராமேஸ்வரம் மதுரை விடுமுறை தொகுப்பு என்று அழைக்கப்படுகிறது. இந்த சுற்றுலாக்கு முன்பதிவு செய்ய தனி நபருக்கு ரூ.22,930 கட்டணம் செலுத்த வேண்டும். அதே தனி நபராக இருந்தால் ரூ.11,600 டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படும்.
மூன்று பேர் செல்வதாக இருந்தால் ரூ.8550 ஆகக் குறையும். மேலும் படுக்கை வசதி வேண்டும் என்றால் ரூ.4000இல்லையெனில் ரூ.2950 மட்டும் என தெரிவித்துள்ளது. இந்த சுற்றுலாவில் இந்தியாவின் தெற்கு எல்லையாக உள்ள மிக முக்கியமான இடம் கன்னியாகுமரி மற்றும் கிழக்கின் ஏதென்ஸ்”என்று அழைக்கப்படும் மதுரை, இந்தியாவின் மிகவும் பிரசித்தி பெற்ற சிவன் கோயில்களில் ஒன்றான ஸ்ரீ ராமநாதசுவாமி கோயில் ஆகிய இடங்களுக்கு சென்று அங்குள்ள அழகை பார்க்கலாம்.
இந்த சுற்றுலா பேக்கேஜ் 8500-இல் இருந்து தொடங்குகிறது. இதுபோன்ற ஆன்மீக சு சுற்றுலாவை மக்கள் அதிகம் விரும்புகிறார்கள் என எண்ணி இதனை பொதுத்துறை நிறுவனமான ஐஆர்சிடிசி தொடங்கி வைத்துள்ளது.