ஒரு வீடு வாஸ்து படி கட்டி இருந்தாலும் சரி, வாஸ்து பார்த்து கட்டாமல் இருந்தாலும் சரி அந்த வீட்டில் குலதெய்வத்தின் அருள் இருந்தால் மட்டுமே அந்த குடும்பம் முன்னேற்றத்தை காண முடியும். வாஸ்து படி சரியான முறையில் ஒரு வீட்டினை கட்டி இருந்தாலும், குலதெய்வ அருள் இல்லை என்றால் குடும்பத்தில் பிரச்சனைகள் இருந்து கொண்டு தான் இருக்கும்.
ஒரு வீட்டிற்கு குலதெய்வத்தின் அருள் இல்லை என்றால், அந்த வீட்டில் உள்ள பிரச்சனைகளை என்ன செய்தாலும் தீர்க்கவே முடியாது. ஏனென்றால் ஒரு குடும்பம் என்பதற்கு அந்த குடும்ப குலதெய்வத்தின் அருள் என்பது மிக மிக முக்கியம். மற்ற தெய்வங்களின் அருள் ஒரு குடும்பத்திற்கு கிடைக்கிறதோ இல்லையோ, குலதெய்வத்தின் அருள் என்பது கண்டிப்பாக கிடைக்க வேண்டும்.
பொதுவாக அனைத்து வீடுகளிலும் ஏதேனும் ஒரு செடியை கண்டிப்பாக வளர்த்து வருவார்கள். அது வாஸ்துவிற்காகவும் இருக்கலாம் அல்லது அழகிற்காகவும் இருக்கலாம். அவ்வாறு வளர்க்கக்கூடிய செடிகளுள் இந்த இரண்டு செடியையும் சேர்த்து வளர்த்து வந்தால் உங்கள் குலதெய்வத்தினுடைய அருளை கண்டிப்பாக பெற முடியும்.
ஏனென்றால் இந்த இரண்டு செடிகளும் குலதெய்வத்தின் அருளை ஈர்க்கக்கூடிய சக்தி கொண்டது. வீட்டில் வளர்க்கக்கூடிய செடிகளுள் 1.பவளமல்லி செடியும், மருதாணி செடியும் ஒன்றாக இணைந்து இருந்தால் மிகவும் சிறப்பு. அதேபோன்று வீட்டில் 2.மாதுளை செடி வளர்த்தால் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும். எனவே இந்த இரண்டு செடிகளையும் வளர்க்கும் பொழுது குலதெய்வத்தின் அருள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும்.
பிரம்ம கமலம் செடியையும் வீட்டில் வளர்க்கலாம். அது குழந்தைகளின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு உதவும். அதேபோன்று உங்கள் வீட்டின் பூஜையறையில் ஸ்ரீ சக்கரம் வரைந்து வைத்து வழிபடுவது மிகவும் சிறப்பு. உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளை செடியிலிருந்து பூக்களை பறித்து வர சொல்லி அந்த ஸ்ரீ சக்கரத்திற்கு போட்டு வழிபட செய்யும் பொழுது குழந்தைகளது கல்வி, ஞானம் மற்றும் வாழ்க்கை சிறப்பாக அமையும்.
ஒரு வீட்டின் வடகிழக்கு திசை மிகவும் குளிர்ச்சியாக அதாவது நீரோட்டத்துடன் இருந்தால் அந்த வீட்டில் செல்வ வளம், உடல் ஆரோக்கியம், குடும்ப ஒற்றுமை ஆகிய அனைத்தும் சிறப்பாக இருக்கும். அதேபோன்று வடகிழக்கு திசையில் செடிகள் வளர்த்து வந்தால் பெரிய செடிகளாக வளர விடக்கூடாது. வீட்டின் ஜன்னல் மட்டத்திற்கு மட்டுமே செடிகளின் உயரம் இருக்க வேண்டும்.
வீட்டை சுற்றிலும் பசுமையான செடிகளை வைத்து வளர்த்து வருவது, தெய்வ கடாட்சத்தை உருவாக்கி தரும். அதே போன்று வீட்டில் உள்ளேயும் எப்பொழுதும் நறுமணத்துடனும், காற்றோட்டத்துடனும் வைத்துக் கொள்ள வேண்டும்.