நாம் தினமும் ஓடி ஓடி உழைக்கின்ற பணம் நமது கைக்கு வருகிறது, ஆனால் அது நம் கையில் தங்குவதில்லை. பணம் நம்மிடம் வந்த உடனேயே ஏதேனும் ஒரு செலவு வந்து விடுகிறது.
எதிர்பாராத செலவுகள் பல ஏற்பட்டு கொண்டே இருக்கிறது. மாதம் மாதம் வருகின்ற சம்பளத்தில் ஏதேனும் சிறிதளவு ஆவது சேமித்து வைக்கலாம் என எண்ணினாலும், திடீரென ஏதேனும் ஒரு செலவு ஏற்பட்டு அந்தப் பணமும் கரைந்து விடுகிறது. உழைப்பினை மட்டும்தான் போட முடிகிறது, சிறிதளவு கூட சேமிக்க முடியவில்லை என விரக்தி ஏற்படும் நிலை வந்து விடுகிறது.
இவ்வாறு இருக்கக்கூடிய வீடுகளில் கண்ணாடியை இந்த ஒரு இடத்தில் வைப்பதன் மூலம் செலவுகள் கட்டுப்படும் என நமது முன்னோர்கள் காலத்திலிருந்து கூறப்பட்டு வருகிறது. நாம் எந்த இடத்தில் பணம் அதிகம் வைத்து புலங்கி வருகிறோமோ அந்த இடத்தில் ஒரு கண்ணாடியை வைக்க வேண்டும்.
பெரும்பாலும் நமது வீட்டின் பீரோவில் உள்ள லாக்கரில்தான் பணம் மற்றும் நகைகளை வைத்திருப்போம். அந்த லாக்கர் இன் உள்ளே ஒரு சிறிய கண்ணாடியை ஒட்டி வைத்துக் கொள்ளலாம். லாக்கர் பெரியதாக இருந்தால் கண்ணாடியை மாட்டி வைத்தும் கொள்ளலாம்.
கண்ணாடிக்கு பிரதிப்பலிக்கும் திறன் உள்ளதால் பீரோவில் உள்ள அந்த கண்ணாடி பணத்தை பீரோவின் உள்ளேயே எதிரொளிக்க செய்யும். இதனால் வீண் செலவுகள் ஏற்படாமல் இருக்கும் எனவும் நமது முன்னோர்கள் கூறியுள்ளனர்.
இவ்வாறு செய்வது நமது முன்னோர்களின் நம்பிக்கை மற்றும் இதனால் பலன் அடைந்திருப்பதால் மட்டுமே அந்த வழியினை நமக்கும் கூறியுள்ளனர்.
அதேபோன்று நமது பூஜை அறையிலும் கண்ணாடியை கிழக்கு புறமாக பார்த்தவாறு வைத்து அதற்கு முன்பாக நமது வீட்டில் எந்த பொருட்கள் குறையாமல் இருந்து கொண்டே இருக்க வேண்டுமோ அந்த பொருட்களை வைத்தும் வழிபாடு செய்யலாம். அதாவது அரிசி, பருப்பு முக்கியமாக கல் உப்பு மற்றும் நாணயங்கள் போன்றவற்றை கண்ணாடியின் முன்பாக வைத்து அதில் எதிரொளிக்குமாறு செய்து வழிபடுவது சிறந்த பலனை நமக்கு கொடுக்கும்.
அதேபோன்று மஞ்சள் குங்குமம் இது போன்ற பொருட்களையும் கண்ணாடி முன்பாக வைத்து வழிபடுவதன் மூலம் லட்சுமி கடாட்சம் நமது வீட்டில் நிரம்பி இருக்கும். மேலும் இந்த வழிபாடு செய்வதன் பணவரவையும் அதிகரித்து கொடுக்கும் என்று நமது முன்னோர்களின் நம்பிக்கையாக இன்றும் பலர் இந்த வழிபாட்டினை செய்து வருகின்றனர். பணத்தட்டுப்பாடு அதிகம் உள்ள வீடுகளில் இது போன்ற வழிபாடுகளை செய்து வரும் பொழுது கண்டிப்பாக அதற்கான பலன் கிடைக்கும்.