பணம் என்பது மனித வாழ்க்கையில் மிகவும் அவசியமான ஒரு தேவையாகும். அதேபோன்று நமது வாழ்க்கையில் சுபிட்சமாக வாழ குணம், பணம், புண்ணியம் ஆகிய அனைத்தும் தேவை. இவ்வாறு அதிக முக்கியத்துவம் வாய்ந்த பணமானது நமது வீட்டில் வற்றாமல் எவ்வாறு பார்த்துக் கொள்வது என்பது குறித்து தான் தற்போது காணப் போகிறோம்.
நமது வீட்டில் பயன்படுத்தக்கூடிய உப்பினை வைத்து பல காரியங்கள் செய்ய முடியும். உப்பு என்பது மகாலட்சுமின் அம்சமாகவும் கூறப்படுகிறது. இந்த உப்பு என்பது நமது வீட்டில் குறையாமல் இருந்தால்தான், நமது வீட்டில் உள்ள லட்சுமியும் குறையாமல் இருக்கும் என்று கூறுவார்கள். இரவில் கடைகளுக்கு வெளியே கல் உப்பினை வைத்து விட்டு கடையை நன்றாக பூட்டி விடுவார்கள். ஏனென்றால் அந்த கல் உப்பினை யாரும் திருட மாட்டார்கள், திருடவும் கூடாது. அவ்வாறு திருடினால் மிகப்பெரிய சாபம் அவர்களுக்கு உண்டாகும்.
இந்த உப்பானது நமது உடம்பிற்கும் முக்கியமானது. அதேசமயம் திருஷ்டியை கழிப்பதற்கும் இந்த உப்பினை தான் பயன்படுத்துவார்கள். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது இந்த கல் உப்பு. இந்த கல் உப்பில் ஒரு பொருளை வைத்தால் பணம் ஆனது நமது குடும்பத்தில் வற்றாமல் இருக்கும்.
கல் உப்பினை போட்டு வைத்துக்கொள்ள உப்பு ஜாடி ஒன்றினை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த ஜாடியானது ஒரு மூன்று கிலோ உப்பினை கொட்டி வைக்கும் அளவிற்காவது இருக்க வேண்டும். அதன் பிறகு ஒன்பது கொட்டை பாக்குகளை வாங்கிக் கொள்ள வேண்டும். இந்த பாக்குகளை நமது வீட்டின் பூஜையறையில் வைத்து தெய்வத்தை நன்றாக வழிபட்டு அதனை ஒரு மஞ்சள் அல்லது சிவப்பு நிற துணியில் வைத்துக் கொள்ள வேண்டும்.
அதனுடன் நாம் பயன்படுத்தக்கூடிய ஐந்து ரூபாய் அல்லது பத்து ரூபாய் காயின்களையும், ஒரு வெள்ளிக்காயின் மற்றும் ஒரு சிறிய தங்கம் போன்றவற்றை வைத்து கட்டிக் கொள்ள வேண்டும். நம்மால் முடிந்தால் தங்கத்தினை போடலாம் இல்லையென்றால் விட்டுவிடலாம். இப்பொழுது அதனை நாம் வைத்துள்ள கல் உப்பு ஜாடியின் அடியில் வைத்து விட வேண்டும். நமது சமையலறையில் இந்த கல் உப்பை வைத்து எப்பொழுதும் போல பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு வைத்து கல் உப்பினை பயன்படுத்தி பாருங்கள், பணவரவு ஏற்படுவதை கண்டு நீங்களே வியப்பீர்கள். கல் உப்பினை எப்பொழுதும் நமது கைகளால் தான் அள்ளி போட்டு பயன்படுத்த வேண்டும். தூள் உப்பினை எடுக்க ஸ்பூன் பயன்படுத்தலாம். ஆனால் கல் உப்பிற்கு ஸ்பூன் பயன்படுத்தக் கூடாது. ஏனென்றால் பெண்களின் கைகளால் அதனை தினமும் எடுக்கும் பொழுது தான் அந்த வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்து இருக்கும்.