2023ம் ஆண்டுக்கான IIFA விருதுகள்! சிறந்த இயக்குநராக நடிகர் மாதவன் தேர்வு!

Photo of author

By Sakthi

2023ம் ஆண்டுக்கான IIFA விருதுகள்! சிறந்த இயக்குநராக நடிகர் மாதவன் தேர்வு!
2023ம் ஆண்டுக்கான ஐ.ஐ.எஃப்.ஏ(IIFA) விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிறந்த இயக்குநருக்கான IIFA விருதை நடிகர் மாதவன் வென்றுள்ளார்.
வருடத்திற்கு ஒரு முறை நடக்கும் IIFA விருதுகள் இந்தி சினிமா துறையில் வழங்கப்படும் விருதுகள் ஆகும். முந்தைய வருடத்தில் வெளியான சிறந்த திரைப்படங்களுக்கும் சிறந்த நடிகர் நடிகைகளுக்கும் மற்றும் பல கலைஞர்களுக்கும் இந்த IIFA விருதுகள் வருடத்திற்கு ஒரு முறை வழங்கபடும்.
அந்த வகையில் 2023ம் ஆண்டுக்கான IIFA விருதுப் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் சிறந்த திரைப்படமாக திரிஷ்யம் 2 தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த இயக்குநருக்கான IIFA விருது ராக்கெட்ரி திரைப்படத்தை இயக்கியதற்காக நடிகர் மாதவனுக்கு வழங்கப்படுகிறது.
சிறந்த நடிகருக்கான IIFA விருது விக்ரம் வேதா திரைப்படத்தில் நடித்ததற்காக நடிகர் ஹிருத்திக் ரோஷன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. சிறந்த நடிகைக்கான IIFA விருது கங்குபாய் திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக நடிகை அலியா பட் அவர்களுக்கு அளிக்கப்படுகிறது.
IIFA 2023 விருதுப்பட்டியல்
சிறந்த திரைப்படம் – திரிஷ்யம் 2
சிறந்த நடிகர் – ஹிருத்திக் ரோஷன்(விக்ரம் வேதா)
சிறந்த நடிகை – அலியா பட்(கங்குபாய்)
சிறந்த இயக்குநர் – மாதவன்(ராக்கெட்ரி)
சிறந்த பின்னணி இசை – சாம் சி.எஸ்(விக்ரம் வேதா)
சிறந்த இசையமைப்பாளர் – ப்ரீதம்(பிரம்மாஸ்திரா)
சிறந்த திரைக்கதை – கதியவாடி(கங்குபாய்).