ஆந்திராவில் கள்ளச்சரயம் ஜெகன் மோகன் எடுத்த அதிரடி நடவடிக்கை! கதறும் சமூக விரோதிகள்!

Photo of author

By Sakthi

ஆந்திர மாநிலத்தில் போதை பொருட்களின் விற்பனை அதிகமாக நடைபெற்று வருகிறது என பொதுவாக பேச்சு எழுந்து வருகிறது.இது பல வருடங்களாகவே நீடித்து வருகிறது அங்கு கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் பொதுமக்களுக்கு மிக எளிதில் கிடைத்து விடுகிறது என்றும் சொல்லப்படுகிறது.

ஆனால் ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசு பொறுப்பேற்றதிலிருந்து இதனை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முதல்கட்டமாக மதுபானங்களை முழுமையாக தடை செய்யும் விதமாக அந்த மாநிலத்தில் டாஸ்மாக்கை முழுமையாக தடை செய்தது மாநில அரசு.

இந்த நிலையில், ஆந்திர பிரதேசத்தின் முதலமைச்சராக இருக்கின்ற ஜெகன்மோகன் ரெட்டி உறவினர்கள் மற்றும் அந்த கட்சியின் சட்டசபை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் மதுபான உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று எதிர்க்கட்சியான தெலுங்குதேசம் கடுமையாகக் குற்றம் சாட்டியது.

சட்டவிரோதமாக மதுபானம் தயாரிப்பது அதிகரித்திருக்கிறது என்று தெரிவித்து அரசுக்கு எதிராக அந்த கட்சி கடந்த சனிக்கிழமை போராட்டத்திலும் குதித்தது ஆந்திராவில் மட்டுமே உற்பத்தி செய்யப்படும் மதுபான வகைகளை பத்திரிகையாளர்கள் முன்பு தெலுங்கு தேச கட்சியின் சட்ட சபை உறுப்பினர் ஒருவர் காட்டினார் என்று சொல்லப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், ஆந்திரப் பிரதேச சிறப்பு முதன்மைச் செயலாளர் பிராஜக்ட் பார்கவா பத்திரிக்கையாளர்களிடம் தெரிவிக்கும்போது சிறப்பு அமலாக்கப்பிரிவு ஆரம்பித்து ஒன்றரை வருடங்களில் சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த பிரிவு நாடு முழுவதுமுள்ள அமைப்புகளில் ஒன்றாகும் என தெரிவித்தார்.

கடந்த 2 வருடங்களில் சிறப்பு அமலாக்க பிரிவானது சட்டவிரோத சாராய உற்பத்திக்கு பயன்படக்கூடிய டன் கணக்கிலான கருப்பட்டிகளையும் அழித்திருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும் ஆந்திர பிரதேச முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவின்பேரில் சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபடும் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக நாங்கள் நடவடிக்கை மேற்கொள்வோம், யாரும் இதற்கு விதிவிலக்கல்ல என்றும் அவர் கூறியிருக்கிறார்.