எனக்கு வருத்தம்பா.. ஜனநாயகனுக்கு ஆதரவு தெரிவித்த பாஜகவின் முக்கிய புள்ளி.. ஷாக்கான டெல்லி மேலிடம்..

BJP TVK: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்னும் அரசியல் கட்சியை ஆரம்பித்து, இக்கட்சி 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் என்று அறிவித்துள்ளார். இந்நிலையில் விஜய்யின் கடைசி படமாக ஜனநாயகம் ஜனவரி 9 ஆம் தேதி திரைக்கு வரவிருந்த நிலையில், இந்த படத்திற்கு சென்சார் போர்ட் வழங்காத விவகாரம் தொடர்பாக திரைப்படம் ரிலிஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டது. இது பாஜகவின் சதி என்று கூறப்பட்ட சமயத்தில், பாஜகவின் மகளிரணி நிர்வாகியும், நடிகையுமான குஷ்பு ஜனநாயகன் திரைக்கு வராததில் எனக்கு மிகவும் வருத்தம் என்று கூறி, விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ளது பாஜக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த இரண்டு மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்கான தேர்தல் பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புதிதாக உதயமான கட்சியான தவெக மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், விஜய் ஆரம்பத்திலேயே பாஜகவை கொள்கை எதிரி என்று கடுமையாக விமர்சித்து வந்தார். மேலும், கரூர் விவகாரத்தில் பாஜக விஜய்க்கு முழு ஆதரவு அளித்தும், அவர் பாஜகவிற்கு ஒரு நன்றி கூட சொல்லவில்லை. இது மட்டுமில்லாமல், விஜய்க்கு பெருகும் ஆதரவை கண்ட பாஜக அவரை கூட்டணியில் சேர்க்க எவ்வளவு முயற்சித்தும் விஜய் அவரது முடிவில் தெளிவாக இருந்தார். இதனால் ஆத்திரமடைந்த பாஜகவினர் விஜய்யையும், தவெகவையும் கடுமையாக விமர்சிக்க தொடங்கி விட்டனர்.

இவ்வாறான நிலையில் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகனுக்கு சென்சார் போர்டு வழங்காத விவகாரம் காரணமாக படம் திரைக்கு வராமல் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. தணிக்கை வாரியம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால், சென்சார் போர்டு வழங்காதது பாஜகவின் சதி திட்டம் என்று பலரும் கூறி வரும் சமயத்தில், பாஜகவின் மகளிரணி நிர்வாகி குஷ்பு, ஒரு விஜய் ரசிகையாக ஜனநாயகன் படம் வெளிவராததற்கு நான் மிகவும் வருத்தப்படுகிறேன் என்று கூறியுள்ளார். இவரின் இந்த கருத்து டெல்லி மேலிடத்தில் புகைச்சலை கிளப்பியுள்ளது.