ரஷ்யப் படைகளின் ஆக்ரோஷ தாக்குதலால் சிதைந்துபோன உலகின் மிகப்பெரிய விமானம்!

Photo of author

By Sakthi

உக்ரைன் மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் இடையே தொடர்ந்து 10வது நாளாக போர் நடைபெற்று வருகிறது இரவு பகல் என்று பாராமல் ரஷ்யப் படைகள் உக்ரைனின் மீது தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றனர்.உக்ரைனின் பல முக்கிய நகரங்களை ரஷ்ய படைகள் கைப்பற்றியிருக்கின்றன.

அதோடு உக்ரைன் நாட்டில் உள்ள மிகப்பெரிய அணுமின் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து அங்கே நெருப்பு கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் பதற்றம் உண்டானது மேலும் உக்ரைனின் பாதுகாப்புத்துறை அமைச்சர் இது தொடர்பாக கவலை தெரிவித்தார்.

அதேநேரம் ரஷ்யப் படைகளின் தீவிர தாக்குதலுக்கு உக்ரைன் நாட்டு ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது இருதரப்பு மோதலில் பலர் பலியாகி இருக்கிறார்கள்.அதிலும் குறிப்பாக உக்ரைன் தரப்பில் பாதுகாப்பு படையினர் பொதுமக்கள் என்று நூற்றுக்கணக்கானோர் பலியாகிவுள்ளார்கள்.

இதற்கிடையே உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் தாக்குதலுக்கு உலக நாடுகள் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். அதோடு ரஷ்யா மீது அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் பொருளாதார தடை விதித்து வருகின்றனர்.

உக்ரைனின் தலைநகர் நோக்கி வரும் ரஷ்ய படைகளை உக்ரைன் பாதுகாப்பு படையினர் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனாலும் ரஷ்யப் படைகள் தங்களுடைய தாக்குதலைத் தொடர்ந்து தீவிரப்படுத்தி உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வருகிறார்கள்.

இந்த நிலையில், உக்ரைனுக்கு சொந்தமான உலகின் மிகப்பெரிய விமானம் அண்டனோவ் 225 மிரியா என்ற விமானம் கடந்த 28ம் தேதி ரஷ்யப் படைகளின் தாக்குதலால் தகர்க்கப்பட்டது.

6 இன்ஜின்கள் 314 டன் எடை கொண்ட இந்த சரக்கு விமானம் நோய்த்தொற்று பரவல் காலத்தில் உலகம் முழுவதும் மருத்துவ பொருட்களை கொண்டு செல்ல பெரும் உதவியாக இருந்ததென்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சரக்கு விமானமானது ரஷ்ய படைகளின் தாக்குதலில் தற்சமயம் பெருமளவு தகர்க்கப்பட்டுள்ளது. விமானத்தை சீரமைக்க 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு செலவுகள் உண்டாகலாம் என்று உக்ரைன் அரசு தெரிவித்திருக்கிறது.