சிறு குழந்தை கூறிய வீடியோ புகாருக்கு உடனே தீர்வு! அசத்திய பிரதமர்!

0
138
Immediate solution to the video complaint made by the child! False Prime Minister!
Immediate solution to the video complaint made by the child! False Prime Minister!

சிறு குழந்தை கூறிய வீடியோ புகாருக்கு உடனே தீர்வு! அசத்திய பிரதமர்!

கொரோனாவின் இரண்டாம் அலை அனைவரையும் வீட்டில் முடங்க வைத்துள்ளது.இது கடந்த ஒரு வருட காலமாகவே தொடர்ந்து வருகிறது.

இந்த சூழ்நிலை அனைத்து வயதினருக்கும் அன்றாட வாழ்க்கை முறையில் பெருத்த மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது.

அதன் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் ஐ.டி. ஊழியர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலம் பாடங்களும், பணிகளும் செய்யப்பட்டு வருவது குறிப்பிட தகுந்தது.

இது கல்வி முறையில் முகுந்த மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது.கோரோனாவினால் நேரடி கல்வியை தொடர முடியாத சூழ்நிலையில் ஆன்லைன் கல்வி வரப்பிரசாதமாகவே மாறி விட்டது.

மேலும் உலகெங்கும், பட்டி தொட்டியெங்கும் இணைய வழி கல்வி மிகவும் பிரபல மடைந்து விட்டது.இந்த கல்வி முறை பெற்றோருக்கும் மனஉளைச்சலை ஏற்படுத்திதான் விடுகிறது.

இந்நிலையில், காஷ்மீரை சேர்ந்த 6 வயது சிறுமி, நீண்ட நேரம் ஆன்லைன் வகுப்புகள் மேற்கொள்வதாகவும், குழந்தைகளுக்கு நிறைய வேலைகள் தருவதாகவும் வீடியோ மூலம் பிரதமருக்கு புகார் ஒன்றை கொடுத்து உள்ளாள்.

45 வினாடிகள் ஓடக்கூடிய இந்த வீடியோவை அவுரங்கசீப் என்கிற பத்திரிக்கையாளர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்ததை தொடர்ந்து அது வைரல் ஆனது.

ஓவ்வொரு நாளும் தான் மேற்கொள்ளும் மனஅழுத்தம் குறித்து தனக்கே உரிய குழந்தை தனத்தில், மழலை கொஞ்சும் மொழியில் கைகளை அசைத்து பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் எனது ஆன்லைன் வகுப்புகள் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 2 மணி வரை தொடர்கிறது. ஆங்கிலம், கணிதம், உருது மற்றும் சுற்றுச்சூழல் கல்வி, அதன் பின்னர் கம்ப்யூட்டர் வகுப்பும் உள்ளது. குழந்தைகளுக்கு நிறைய வேலை இருக்கிறது. சிறிய குழந்தைகள் ஏன் இவ்வளவு வேலைகளை சமாளிக்க வேண்டும் மோடி ஐயா ? என பொரிந்து தள்ளுகிறாள்.

அதன் பின்னர் சில நொடிகள் மவுனத்துக்கு பின் என்ன செய்ய முடியும்? வணக்கம் மோடி ஐயா. விடைபெறுகிறேன் என கூறி சிறுமி தனது பேச்சை முடிக்கிறாள்.

இந்த வீடியோ இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகளை வாங்கிக் குவித்துள்ளது. 1,300க்கும் அதிகமானோர் இந்த பதிவை ரீடுவிட் ம் செய்துள்ளனர்.

ஆன்லைன் வகுப்பு குறித்து பிரதமர் மோடியிடம் 6 வயது சிறுமி புகார் அளித்ததன் அடிப்படையில் அங்கு ஆன்லைன் வகுப்புகளுக்கு நேரக்கட்டுப்பாடு தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அம்மாநில நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், தொடக்கக்கல்விக்கு முந்தைய வகுப்பு மாணவர்களுக்கு தினமும் அரை மணி நேரமும், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு ஒன்றரை மணி நேரமும் ஒதுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 3 மணி நேரத்துக்கு மிகாமலும் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleநெட்டிசன்களுக்கு வேண்டுகோள் வைத்த துல்கர் சல்மான்!
Next articleபிரபல தயாரிப்பாளர் திடீர் மரணம்! சோகத்தில் திரையுலகம்!