பிளஸ் 2 மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அரசு தேர்வுகள் துறை!

Photo of author

By Sakthi

பன்னிரண்டாம் வகுப்பு பொதுப்பேரவை எழுதுவதற்காக தனித்தேர்வர்கள் இன்று முதல் விண்ணப்பம் செய்யலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது அரசுத்தேர்வுகள் துறை இயக்குனர் உஷாராணி வெளியிட்டிருக்கின்ற செய்தி குறிப்பில் , நடைபெறவிருக்கின்ற மே 2021 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி உள்ள தனித்தேர்வர்கள் இடமிருந்து இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல சென்ற வருடம் நேரடி தேர்வுகள் அரசு மேல்நிலை முதலாம் ஆண்டு தேர்வை எழுதி தேர்ச்சி அடைந்த மற்றும் தேர்ச்சி அடையாத எல்லோரும் தற்சமயம் மேல்நிலை இரண்டாம் வருட பொதுத் தேர்வை எழுத விண்ணப்பம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

2021 ஆம் ஆண்டு மேல்நிலை இரண்டாம் வருட பொதுத்தேர்வு இருக்கு விண்ணப்பம் செய்வதற்கு விருப்பமுள்ள தனித்தேர்வர்கள் 26- 2- 20201 மற்றும் 6-3- 2021 வரையிலான நாட்களில் கல்வி மாவட்ட வாரியாகதேர்வு அமைக்கப்பட்டுள்ள அரசுத்துறை சேவை மையங்களுக்கு நேரில் இணையதளம் மூலமாக தங்களுடைய விண்ணப்பத்தை பதிவு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் தேதிகளில் விண்ணப்பம் செய்ய தவறிவிட்டால் 8-3 -2021 மற்றும் 9-3- 2021 ஆகிய இரண்டு தினங்களிலும் அரசு தேர்வுத்துறை சேவை மையத்திற்கு நேரில் சென்று தேர்வுக் கட்டணத்துடன் கூடுதலாக 1000 ரூபாய் சிறப்புக் கட்டணம் செலுத்தி இணையதளம் மூலமாக தட்கல் முறையில் விண்ணப்பம் செய்யலாம்.

கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுத்துறை சேவை மையங்களில் கவர்மெண்ட் எக்ஸாமினேஷன் சர்வீஸ் சென்டர்ஸ் விவரங்கள் மற்றும் இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவு செய்தல் தொடர்பாக தனித்தேர்வர்களுக்கான அறிவுரைகள் மற்றும் தகுதி ஆகியவற்றை இணையதளத்தில் மூலமாக விண்ணப்பதாரர்கள் அனைவரும் அறிந்து கொள்ளலாம்.

அதோடு இந்த விவரங்கள் எல்லாம் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகங்கள், அனைத்து மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்கள், மற்றும் எல்லா அரசுத் துறை தேர்வு உதவி இயக்குநர் அலுவலகங்களிலும் தெரிந்து கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் துறை இயக்குனர் தெரிவித்திருக்கிறார்.