அமர்நாத் யாத்திரை செல்ல விரும்பும் நபர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி யாத்திரை செல்பவர்களுக்கு முன்பதிவு தொடங்கியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமர்நாத் யாத்திரை செல்பவர்களுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளதாக தற்பொழுது அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இதையடுத்து முன்பதிவு செய்ய விருப்பமுள்ளவர்கள் முன்பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இமயமலைப்பகுதியில் அமர்நாத் என்ற பகுதி இருக்கின்றது. இங்கு உள்ள குகையில் இயற்கையாக உருவான பனி லிங்கம் இருக்கின்றது. இந்த பனி லிங்கத்தை பார்க்க வருடம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொண்டு தரிசித்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்பொழுது இந்த ஆண்டுக்கான அமர்நாத் பயணம் குறித்தான முக்கிய அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. அந்த வகையில் இந்த ஆண்டு ஜூன் 29ம் தேதி முதல் ஆகஸ்ட் 19ம் தேதி வரை பக்தர்கள் யாத்திரை மேற்கொள்ள அனுமதி தரப்பட்டுள்ளது. இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் பக்தர்களின் பாதுகாப்பு, அடிப்படை வசதிகளை உறுதி செய்யும் வகையில் தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த வீரர்களும், மாநில பேரிடர் மீட்பு படையை சேர்ந்த வீரர்களும், மேலும் ஜம்மு காஷ்மீர் மாநில காவல்துறையின் மலை மீட்பு குழுக்களை சேர்ந்த வீரர்களும் சிறப்பு பயிற்சி பெற்று வருகின்றனர்.
அமர்நாத் யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள் பாரம்பரிய வழி மற்றும் பால்டால் வழியாக குறுகிய பாதை ஆகிய இரண்டு பாதைகள் வழியாக குகைக் கோயிலுக்கு செல்கின்றனர். பாரம்பரிய வழி மற்றும் பால்டாலின் குறுகிய பாதை ஆகிய இரண்டு பாதைகளிலும் பக்தர்களுக்கு உதவும் வகையில் வீரர்கள் நிறுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஜூன் 29ம் தேதி தொடங்கும் அமர்நாத் புனித யாத்திரைக்கு தற்பொழுது முன்பதிவு தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. முன்பதிவு செய்ய விரும்பும் நபர்கள் அருகில் இருக்கும் பஞ்சாப் நேஷனல் வங்கியின் கிளைகளில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இந்தியா முழுவதிலும் இருக்கும் பஞ்சாப் நேஷனல் வங்கியின் 540 கிளைகளிலில் அமர்நாத் புனித யாத்திரைக்கு முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகின்றது.