இறுதியாண்டு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
இறுதிப்பருவத் தேர்வு எழுதும் பொறியியல் மாணவர்களுக்கு,
அண்ணா பல்கலைக்கழகம் ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.கொரோனா பரவல் காரணமாக வழக்கம்போல் தேர்வு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால்,ஆன்லைன் தேர்வு எழுதவும், கல்லூரிகளுக்கு வர முடியாத சூழல் உள்ள மாணவர்கள் வீட்டிலிருந்து தேர்வு எழுதவும் அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில்
வருகின்ற செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நடைபெறும் இறுதி பருவத் தேர்வில் சில தளர்வுகளையும், வழிகாட்டு நெறிமுறைகளையும்
அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
அண்ணாபல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி பல்கலைக்கழக மானியக் குழுவின் பரிந்துரையின்படி இறுதியாண்டு தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வு அறையில் புத்தகம் மற்றும் குறிப்பேடுகளை வைத்து தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் என்று பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி லாசர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்த முறையின் மூலமாக கேள்விக்கான பதில்களை மாணவர்கள் புரிந்து கொண்டு பதிலளிக்க வழிவகை செய்யும் என்றும் இது மட்டுமின்றி மாணவர்கள் கொண்டுவரும் புத்தகங்களை மற்றவர்களுக்கு பரிமாறாமல் இருப்பதை தலைமை அதிகாரி கண்காணிப்பார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் மாணவர்களுக்குக் கொடுக்கப்படும் விடைத்தாளில் கருப்பு மையை பயன்படுத்தி மட்டுமே பதிலளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஆஃப்லைன் தேர்வு எழுதும் மாணவர்கள், தேர்வு எழுதிய அரை மணி நேரத்திற்குள் அனைத்து பக்கங்களையும் ஸ்கேன் செய்து அந்தந்த கல்லூரிகளுக்கு அனுப்ப வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.