பிளஸ் 1 மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

Photo of author

By Pavithra

பிளஸ் 1 மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

Pavithra

பிளஸ் 1 மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் விடைத்தாள் நகலை பெற விண்ணப்பித்திருந்த மாணவர்கள் இன்று பிற்பகல் 3 மணி முதல்
கீழேகொடுக்கப்பட்டிருக்கும் இணையதள முகவரியில் பெற்றுக்கொள்ளலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

http://www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து விடைத்தாள் நகல்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று பள்ளிக் கல்வித் துறை கூறியுள்ளது.

மேலும் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டுற்க்கு
விண்ணப்பிப்பதற்கான, விண்ணப்ப படிவத்தையும் இதே இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும்,ஆகஸ்ட் 31-ஆம் தேதி முதல் செப்டம்பர் 2-ஆம் தேதிக்குள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து மாவட்ட கல்வி அலுவலகத்தில் உரிய கட்டண தொகையை விண்ணப்பத்தோடு ஒப்படைக்க வேண்டும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.