பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளானது கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியானது.இதனையடுத்து அவர்களுக்கு அவர்கள் படித்த பள்ளிகளிலேயே தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி நாளை தொடரும் என்று பள்ளிக் தேர்வுதுறையால் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து தேர்வுத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அவர்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை, அந்தந்த பள்ளிகளில் உள்ள தலைமை ஆசிரியர்களே பதிவிறக்கம் செய்து அதன் விவரங்களை சரிபார்த்து தயாராக வைத்துக்கொள்ளவேண்டும்.
அதனைத் தொடர்ந்து சான்றிதழ்களை ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 21-ஆம் தேதி வரை மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.அதேபோல் சான்றிதழில் ஏதேனும் பிழைகள் ஏற்பட்டால் அதனை தலைமை ஆசிரியர்களை சரிசெய்து சான்றொப்பமிட்டு வழங்க வேண்டுமென்று அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தமிழ்நாடு தேர்வாணையம் அறிவுறுத்தியுள்ளது.