தமிழ் எழுத்தாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. தமிழக அரசு தரும் ரூ 1 லட்சம்!! உடனே விண்ணப்பியுங்கள்!!

Photo of author

By Jeevitha

தமிழ் எழுத்தாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. தமிழக அரசு தரும் ரூ 1 லட்சம்!! உடனே விண்ணப்பியுங்கள்!!

வருடந்தோறும் நடைபெறும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்  நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் கலை இலக்கிய மேம்பாட்டுச்  சங்கத்தின் மூலம் சிறந்த எழுத்தாளர்கள் தங்களுடைய படைப்பினை அனுப்புவதன் மூலம் ரூபாய் ஒரு லட்சம் உதவித்தொகை அரசால் வழங்கப்பட்டு வருகிறது. விருப்பமுள்ள எழுத்தாளர்களின் புதிய படைப்புகள் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு  வரவேற்க்கபடுகிறது.

ஆதிதிராவிடர்  மற்றும் பழங்குடியினர் மற்றும் வேறு மதத்திலிருந்து  மதம் மாறிய ஆதிதிராவிடர் இனத்தைச்சேர்ந்த 9 எழுத்தாளர்களும் அவர்களின் பிரச்சினைகளை எடுத்துரைக்கும் ஒரு எழுத்தாளரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அல்லாத ஒரு எழுத்தாளரும்  என மொத்தம் பதினொரு எழுத்தாளர்கள் இதன் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். இதற்கு விண்ணப்பிக்க வயது வரம்பு தேவையில்லை.

எழுத்தாளரின் படைப்புகள் புதியதாகவும் தமிழ் மொழியிலும் அல்லது மற்ற மொழிகளிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டு தமிழ் மொழியில் வரலாறு, கட்டுரை, கதை, கவிதை மற்றும் புதினம் ஆகிய வடிவில் 90 பக்கங்களுக்கு குறையாமல் இருக்கவேண்டும். விண்ணப்பதாரர்களால் கொடுக்கப்பட்ட படைப்புகளில் சிறந்த 11 படைப்புகளை அரசால் அமைக்கட்ட குழுவே தீர்மானிக்கும்.

விண்ணப்பிக்கும் முறைகள் பின்வருமாறு:

1)  மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அலுவலகம்.
2)  ஆதிதிராவிடர் நல இயக்குநரகம்.

ஆகிய இடங்களில் வேலை நாட்களில் விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம் அல்லது tn.gov.in/forms என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
படைப்பினை இரு  நகல்களிலும் டிஜிட்டல் முறையிலும் தங்களுடைய கைபேசி எண்ணை உரிய படிவத்தில் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.30.08.2024 கடைசி நாள் ஆகும்.

விருப்பமுள்ள எழுத்தாளர்கள் தங்களது படைப்பினை இயக்குநர்,ஆதிதிராவிடர் நலத்துறை, சேப்பாக்கம்,சென்னை-05 என்ற முகவரிக்கு குறிப்பிட்ட தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒருமுறை விருதுக்கு பதிவு செய்த விண்ணப்பதாரர்  மீண்டும் 5 ஆண்டுகளுக்குப் பிறகு மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்ற வரைமுறை உள்ளது குறிப்பிடத்தக்கது.