பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் கவனத்திற்கு:! பள்ளிக்கல்வித்துறை பள்ளி மாணவர்களுக்கு வெளியிட்டுள்ள மிகமுக்கிய அறிவிப்பு!

Photo of author

By Pavithra

பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் கவனத்திற்கு:!பள்ளிக்கல்வித்துறை பள்ளி மாணவர்களுக்கு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

கொரோனா பாதிப்பு காரணமாக ஜூன் மாதத்திலேயே தொடங்கியிருக்க வேண்டிய 2020-2021 கல்வியாண்டு இன்னும் தொடங்கப்படவில்லை.
இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாகவும் தொலைக்காட்சி வாயிலாகவும் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.
இதுமட்டுமின்றி இதற்குமேல் பள்ளிகளை திறந்து அனைத்து பாடத்திட்டங்களையும் முடித்து பொதுத் தேர்வுகளை நடத்துவது என்பது நடக்காத காரியமாகும்.எனவே மாணவர்களுக்கு பாடச்சுமையை குறைக்கும் வகையிலும்,நேரமின்மை காரணமாகவும்,பள்ளிக்கல்வித்துறை மற்றும் ஆசிரியர் குழு மாணவர்களின் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பாடத் திட்டத்தை குறைக்கும் பணி கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இந்த பணி நிறைவு பெற்றதாக நேற்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.வருகின்ற செப்டம்பர் 21-ஆம் தேதி முதல் அந்தந்த மாநிலங்களின் நோய் பரவலுக்குஏற்பவும்,
பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்பவும்,ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை மாணவர்கள் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பள்ளிக்கு செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் வருகின்ற அக்டோபர் ஐந்தாம் தேதி முதல் மாணவர்கள் விருப்பத்தின் பேரில் பள்ளிகளில் அனுமதிப்பது குறித்து ஆலோசித்து வருவதாக கூறப்படுகின்றது.
ஆலோசனையின்படி அக்டோபர் ஐந்தாம் தேதி பள்ளிகள் திறந்தால் பகுதியாக குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் கீழே மாணவர்களுக்கு பயிற்சி அளித்து,பொதுத்தேர்வுக்கு தயார் படுத்தப்படும் என்றும் பள்ளி கல்வி துறையால் கூறப்பட்டுள்ளது.