கடந்த சில ஆண்டுகளாகவே, நடிகர் விஜய் அரசியல் நோக்கத்துடன் ஆடியோ லான்ச் விழாக்களில் பேசி வந்த நிலையில், இப்போது விஜய்யின் அரசியல் வருகை சம்பந்தமாக ஒரு தகவல் வெளியான நிலையில் அது வதந்தி என்பதை விஜய் தரப்பினர் சார்ந்தவர்கள் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.
விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் விஜயுடைய அரசியல் வருகை சம்பந்தமான தகவல்களை அவ்வப்போது வெளியிட்டு வருகின்றார்.
அந்த வகையில் சில நாட்களுக்கு முன்பு கூட விஜயினுடை மக்கள் இயக்கம் சரியான நேரத்தில் அரசியல் கட்சியாக மாறும் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சென்ற வாரம் விஜய் சென்னை பனையூரில் இருக்கின்ற தன்னுடைய வீட்டில் விஜய் மக்கள் மன்றத்தை சார்ந்த நிர்வாகிகளுடன் ஒரு ரகசிய ஆலோசனை நடத்தி இருக்கின்ற சம்பவம் விஜய் அரசியலில் நுழைவதற்கான தயாராகி விட்டாரா? என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திடீரென்று விஜய் திருச்சி மேற்கு, திருச்சி தெற்கு, மதுரை வடக்கு, மதுரை மேற்கு ,ஆகிய பகுதிகளைச் சார்ந்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி இருக்கின்றார். இந்த சந்திப்பானது தமிழக அரசியல் வட்டாரத்தில் ஒரு சலசலப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.
இப்போது இது சம்பந்தமான அதிகாரபூர்வமான தகவல் வெளியாகி இருக்கின்றது. கட்சியின் பெயரை தலைமை தேர்தல் ஆணையத்தில் அகில இந்திய தளபதி மக்கள் இயக்கம் என்ற பெயரில் பதிவு செய்து இருப்பதாகவும், கட்சித் தலைவராக பத்மநாபன், அவர்களும் பொதுச் செயலாளராக எஸ் ஏ சந்திரசேகர் அவர்களும் பொருளாளராக ஷோபா அவர்களும் நியமிக்கப்பட்டிருப்பதாக என ஒரு தகவல் வெளியானது.
இப்படி வெளியான தகவல் முற்றிலும் வதந்தி என்று விஜயுடைய மக்கள் தொடர்பாளர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.