கட்சியின் ரகசிய தகவல்களை கசிய விடும் முக்கிய நபர்!! விஜய் எடுத்த அதிரடி நடவடிக்கை!!

Photo of author

By Sakthi

politics:தமிழக வெற்றிக் கழக கட்சி எடுக்கும் முக்கிய  தகவல்கள் உடனடியாக மாநில உளவுத்துறைக்கு கசிந்து  வருகிறது.

நடிகர் விஜய் , தமிழகத்தில் ரசிகர் மன்றம் தொடங்கி இன்று தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். இவர் முழுமையாக சினிமாவை விட்டுவிட்டு அரசியலில் இறங்கி இருக்கிறார்.  இந்த நிலையில் தவெக கட்சியில் எடுக்கும் முக்கிய முடிவுகள் மற்றும் ரகசிய தகவல்கள் மாநில உளவுத்துறைக்கும், திமுக தலைமைக்கு உடனடியாக தெரிகிறது.

அந்த வகையில் சில தினங்களுக்கு முன் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் 2 பேருடன் விஜய் பேசிய ரகசிய தகவல் குறித்து உடனடியாக திமுகவில் இருக்கும் விஜய்க்கு நெருங்கிய நண்பர் கேட்ட போது அதிர்ச்சி அடைந்து இருக்கிறார் விஜய். கட்சியின் முக்கிய தகவலை உளவுத்துறைக்கு தெரிவிப்பது யார் என்ற கேள்வி?  காட்சியில் எடுக்கப்படும்  அரசியல் முடிவுகளை  மற்ற கட்சிகளுக்கு தெரியவருவது எவ்வாறு!  என பல கேள்விகள்  விஜய்க்கு எழுந்துள்ளது.

இந்த நிலையில் தவெக கட்சியின் முக்கிய பொறுப்பில் இருக்கும் புஸ்சி ஆனந்த், உளவுத்துறையுடன் நெருக்கத்தில் இருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது. இதனால் அவர் மீது விஜய் கோபப்படாமல் இருந்துள்ளார். மேலும் தவெக தலைவர்  புஸ்சி ஆனந்த் வகிக்கும் மாநில பொது செயலாளர் பதவியை சுருக்கி  புதுச்சேரிக்கு அவரையும் , தமிழகத்திற்கு என புதிய பொது செயலாளர் நியமிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே தவெக கட்சியில் இரண்டு பொதுச் செயலாளர்கள் இருப்பார்கள் என்ற தகவல் வெளியாகி வருகிறது.