திருநங்கைகளுக்கான முக்கிய அறிவிப்பு!! இனி இவ்வாறு செய்தால் லாக்கப் தான்!!
ஆந்திர மாநிலத்தில் திருநங்கைகளுக்கு என புகார் எண் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருநங்கைகளை யாராவது கேலி, கிண்டல் சொய்தாலோ அல்லது திருநங்கைகளை துன்புறுத்துவது, அவர்களை மனரீதியாக துன்புறுத்துவது போன்ற செயல்களை செய்தால் இந்த எண்ணிற்கு அழைத்து புகார் தெரிவிக்கலாம். கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
ஆந்திர மாநிலம் குண்டூரில் உள்ள சி.ஐ.டி அலுவலகத்தில் திருநங்கைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க சிறப்புத் தனிப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. திருநங்கைகள் பாதுகாப்பு உதவி எண் 1091 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த எண்ணிற்கு திருநங்கைகள் அழைத்து தங்களுக்கு இருக்கும் பிரச்சனைகளை கூறினால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
திருநங்கைகள் பாதுகாப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாக சி.ஐ.டி மகளிர் பாதுகாப்பு பிரிவு எஸ்.பி சரிதா அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து எஸ்.பி சரிதா அவர்கள் “திருநங்கைகள் பாதுகாப்பு சட்டத்தின் படி இந்த திருநங்கைகள் பாதுகாப்பு உதவி மையம் செயல்படும். கட்டணமில்லாத தொலை பேசி என்பதாலும், இந்த சேவைக்கு கட்டணம் ஏதும் இல்லை என்பதாலும் திருநங்கைகள் அனைவரும் இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
திருநங்கைகள் அனைவருக்கும் சுயமரியாதை என்பது இருக்கின்றது. இவர்களை உடல் ரீதியாக துன்புறுத்துபவர்களுக்கு இந்த பாதுகாப்பு உதவி மையம் மூலம் உரிய தண்டனை வழங்கப்படும். இந்த பாதுகாப்பு உதவி எண் திருநங்கைகளுக்கு பெரிதும் உதவியாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.