ADMK AMMK: 2021 தேர்தலில் தோல்வியடைந்த அதிமுக, இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென போராடி வருகிறது. அதற்காக பாஜக உடன் கூட்டணி அமைத்து பல்வேறு வியூகங்களை வகுத்து வரும் இபிஎஸ்க்கு அதிமுகவிலிருந்து வெளியேற்றபட்டவர்களால் புதிய இன்னல்கள் உருவாகி வருகின்றன. அந்த வகையில், இபிஎஸ்யால் வெளியேற்றபட்ட தினகரன், இபிஎஸ்யின் துரோகத்தை எதிர்த்து புதிய கட்சி தொடங்கினார். பின்னர் பாஜக கூட்டணியில் இணைந்த இவர், நயினாரின் செயல்பாடுகள் பிடிக்காத காரணத்தினால் அந்த கூட்டணியிலிருந்து விலகினார்.
மேலும் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது என்றும் திட்டவட்டமாக கூறி வந்தார். இவ்வாறான நிலையில், இபிஎஸ்யை தொடர்ந்து விமர்சனம் செய்து வந்த தினகரன் எடுத்த கட்டமாக என்ன செய்ய போகிறார் என்பது கேள்வி குறியாகவே இருந்தது. இவ்வாறு தினகரனின் அடுத்த நகர்வு குறித்த கேள்வி எழ, அவருக்கு பாதகமாக ஒரு நிகழ்வு அரங்கேறியுள்ளது. தற்போதைய அமமுகவின் அரியம் பாளையம் பேரூராட்சி செயலாளர் துரைசாமி மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார்.
அவருடன் அமமுக ஒன்றிய செயலாளர் கே.சி. சண்முகம், வார்டு செயலாளர் கோபால் அசோகன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் அதிமுகவில் இணைந்துள்ளனர். இவர்களின் இந்த இணைவு எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாகவே அமைந்துள்ளது. தேர்தல் நேரத்தில் பிரிந்த அனைவரும் தாய் கழகத்தில் இணைவது, அதிமுகவின் வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. மேலும் இந்த நிகழ்வின் மூலம், இன்னும் சிலர் அமமுகவிலிருந்து விலகி அதிமுக இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.