பொன்முடிக்கு வழங்கப்பட்ட முக்கிய பதவி.. தீவிர தேர்தல் வேட்டையில் திமுக!!

0
123
Important post given to Ponmudi.. DMK in serious election hunt!!
Important post given to Ponmudi.. DMK in serious election hunt!!

DMK: சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், ஆளுங்கட்சியாக உள்ள திமுக தொடர்ந்து 7 வது முறையும், ஆட்சி கட்டிலில் அமர வேண்டுமென முயற்சி செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஓரணியில் தமிழ்நாடு, என்ற பிரச்சார பயணத்தையும், மண்டலம் வாரியாக திமுகவின் முக்கிய நிர்வாகிகளையும் நியமித்து அந்த பகுதிகளை திமுக வசம் கொண்டு வரும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வளவு முயற்சிகளை மேற்கொள்ளும் திமுகவை எதிர்க்க இத்தனை வருடங்களாக அதிமுக மட்டுமே பிரதான எதிரியாக இருந்து வந்தது.

ஆனால் தற்போது புதிதாக தமிழக வெற்றிக் கழகம் கட்சியும் இணைந்துள்ளது. இந்த சவாலை எதிர் கொண்டிருக்கும் திமுக தற்போது புதிதாக 2 துணை பொதுச் செயலாளர்களை நியமித்திருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. திமுகவில் ஏற்கனவே கனிமொழி, ஆ ராசா, திருச்சி சிவா, அமைச்சர் ஐ.பெரியசாமி, அந்தியூர் செல்வராஜ்  ஆகிய 5 துணை பொதுச்செயலாளர்கள் இருக்கும் நிலையில், தற்போது புதிதாக  திமுகவின் முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் தற்போதைய அமைச்சர் சாமிநாதன் நியமிக்கபட்டுள்ளனர்.

புதிதாக  2 பொதுச் செயலாளர்கள் தலைதுக்கி இருப்பது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பொன்முடி இதற்கு முன் நடந்த திமுக நிகழ்ச்சியில் பெண்களை சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக அவர் மீது கடும் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன. இதனை தொடர்ந்து பொன்முடியின் துணை பொதுச்செயலாளர் பதவி பறிக்கபட்டது. ஆனால் தற்போது தேர்தலை கருத்தில் கொண்டு திமுக தலைமை இவருக்கு மீண்டும் இந்த பதவியை வழங்கி இருப்பது பேசுபொருளாகியுள்ளது. மேலும் சட்டமன்ற தேர்தலுக்காக திமுக மேற்கொள்ளும் வியூகங்களில் இதுவும் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

Previous articleபாமக எம்எல்ஏ மீது கடும் தாக்கு.. கோபத்தின் உச்சத்தில் நிர்வாகிகள்!! இதற்கு இவர் தான் காரணமா!!