முக்கிய பதிவு! பள்ளி மாணவர்களுக்கு வெளியான முக்கிய தகவல்!!

Photo of author

By Pavithra

முக்கிய பதிவு! பள்ளி மாணவர்களுக்கு வெளியான முக்கிய தகவல்!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை மத்திய மாநில அரசுகள் எடுத்து வருகின்றனர்.தமிழகத்திலும் பாதிப்பைக் கட்டுப்படுத்த ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டாலும்,தற்போது வரை பள்ளி மற்றும் கல்லூரிகள் முழுமையாக திறப்பது குறித்து தமிழகத்தில் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

ஆனால் வருகின்ற அக்டோபர் 1ம் தேதி முதல் 10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் அவர்களின் விருப்பத்தின் பேரில் பள்ளிக்கு செல்லலாம் என்றும்,ஆசிரியர்களிடம் தங்களது சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம் என்றும் அரசு அனுமதி அளித்துள்ளது.ஆனால் இவ்வாறு பள்ளிக்கு செல்லும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை இரண்டு குழுக்களாக பிரித்து உள்ளது.இந்த இரண்டு குழுக்களின் அடிப்படையில்,பள்ளிக்குச் செல்லும் நாட்கள் வரையறுக்கப்பட்டுள்ளது.
அதாவது முதல் குழு மாணவர்கள் திங்கள்,புதன் மற்றும் வெள்ளிக்கிழமை நாட்களிலும்,இரண்டாவது குழு மாணவர்கள் செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமை நாட்களிலும் பள்ளிக்கு செல்ல அனுமதி அளித்துள்ளது.
அதேபோன்று ஆசிரியர்கள் முதல் குழு திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளிலும், இரண்டாவது குழு புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் மீண்டும் முதல் குழு வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் ஆகிய நாட்களில் ரொட்டேஷன் முறையில் வரவும் விதிகள் கூறப்பட்டுள்ளது.நோய் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இதுபோன்று குழுகள் முறையில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர அனுமதிக்கப்பட்டுள்ளது.