நாம் வாழக்கூடிய வீடு தான் நமது வாழ்க்கையை தீர்மானிக்கிறது என்பதை உங்களால் நம்ப முடிகிறதா? அதாவது நமது வீட்டை நாம் எவ்வாறு வைத்து இருக்கிறோம், எந்தெந்த பொருட்களை வைத்து இருக்கிறோம் என்பதை வைத்து தான் நமது வாழ்க்கை மற்றும் மனநிலை எவ்வாறு இருக்கும் என்பதை கூற முடியும்.
ஒரு சில பொருட்களை வீட்டில் வைப்பதன் மூலம் செல்வ வளம் குறையும் என்று கூறுவதைப் போன்று, ஒரு சில பொருட்களை நமது வீட்டில் வைத்தால் செல்வ வளம் மற்றும் லட்சுமி கடாட்சம் ஆகிய அனைத்தும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
நம்முடைய வீட்டில் வைத்திருக்கும் சில மங்கலகரமான பொருட்கள் செல்வ செழிப்பை அதிகரித்து வீட்டை லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வைத்திருக்க உதவுகிறது. இந்தப் பதிவில் அந்த பொருட்கள் என்னென்ன என்பதைப் பற்றி தெளிவாக காண்போம்.
1. விநாயகர் படம்:
நமது வீட்டின் ஹாலில் கண்டிப்பாக விநாயகர் படம் வைத்திருக்க வேண்டும். நம் வீட்டிற்கு புதிய நபர்கள் வரும்போது இந்த விநாயர் படத்தை பார்க்கும் போது அது அவர்களுக்கு சாந்தத்தையும், மனநிம்மதியையும் தரும் என்று சொல்லப்படுகிறது. புத்தரின் சிலையை ஹாலில் வைக்கும் போது அவர் அமைதியான தியானம் செய்யக்கூடிய நிலை, சண்டை சச்சரவு இன்றி சாந்தமாக பேசக்கூடிய சூழ்நிலையை உருவாக்கும்.
2. கண்ணாடி:
வீட்டின் வாசலில் கண்ணாடியை வைப்பது மிகவும் நல்லது. இது எதிர்மறையான விஷயங்களை தடுப்பதோடு மட்டுமல்லாமல் எதிர்றையான எண்ணங்களைக் கொண்ட மனிதர்களின் மனதை மாற்றக்கூடிய ஆற்றலையும் கொண்டது.
3. மாவிலை தோரணம்:
வீட்டில் ஏதேனும் விஷேசம் நடக்கும் போது மாவிலை தோரணம் கட்டும் பழக்கம் இருக்கும். இதை விஷேச நாட்களில் தான் கட்ட வேண்டும் என்றில்லை. செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் மாவிலை தோரணம் கட்டலாம். மாவிலை தோரணத்தை மஞ்சள் கயிற்றில் கட்டுவது இன்னும் விஷேசம் என்று சொல்லப்படுகிறது. இவ்வாறு செய்யும் போது வீட்டிற்கு அதிர்ஷ்டத்தையும், நேர்மறையான ஆற்றலையும் கொண்டு வரும்.
4. இயற்கை தொடர்பான படங்கள்:
வீட்டினுடைய ஹாலில் இயற்கை சம்மந்தமான படங்களை வைப்பது சிறப்பு. இயற்கையான விஷயங்களை படங்களாகவோ அல்லது ஓவியமாகாவோ பார்க்கும் போது மனதுக்கு ஆத்மதிருப்தி ஏற்படுத்தும். நீர்வீழ்ச்சி, கடல், காடு, ஆறு போன்றவையாக அப்படங்கள் இருக்கலாம். இதை பார்க்கும் போது நமக்கு பல்வேறு செயல்களை செய்வதற்கான ஊக்கத்தை கொடுக்கும்.
5. மங்கல பொருட்கள்:
நமது வீட்டின் ஹாலில் ஒரு தட்டில் மஞ்சள், குங்குமம், விபூதி போன்ற மங்கலகரமான பொருட்களை வைத்திருக்க வேண்டும். சுமங்கலி பெண்களுக்கு குங்குமமும், குழந்தைகள் வந்தால் விபூதியிட்டு ஆசிர்வதிப்பதும் நல்ல செயலாக கருதப்படுகிறது.
6. தண்ணீர்:
நம் வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு வந்த உடனேயே தண்ணீர் குடிக்க தருவது ஆத்ம சாந்தியை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. எனவே வீட்டின் ஹாலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி வைத்துக் கொள்வது சிறப்பை தரும்.