தமிழக அரசு பேருந்துகளில் இன்று முதல் கொண்டு வரப்படும் புதிய சேவை! மகிழ்ச்சியில் மக்கள்!

0
175

தமிழ்நாட்டில் அரசு பேருந்துகளில் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்துவதற்கு அரசு போக்குவரத்து கழகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக அரசு பேருந்துகளில் பார்சல் சேவைகளை தொடங்குவதற்கு போக்குவரத்து கழகம் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

இதன் மூலமாக ஒரு பகுதியில் அபரிமிதமாக இருந்து வரும் உற்பத்தி பொருட்களை வெளியூர்களுக்கு எடுத்துச் செல்லும் விதமாக அமைந்திருக்கிறது. அதேபோல வியாபாரம் செய்பவர்களும் பொருட்களை மொத்தமாக கொள்முதல் செய்து லாரி மற்றும் பார்சல் சர்வீஸ் மூலமாக எடுத்துச் செல்கிறார்கள்.

இந்த சேவையை சிறு, பெரு, வியாபாரிகள், வணிகர்கள், முகவர்கள் மற்றும் பொதுமக்கள், உள்ளிட்டோர் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கு பயனர்கள் அருகில் இருக்கின்ற தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக கிளை மேலாளரிடம் விண்ணப்பம் வாங்கி பூர்த்தி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous article டிஎஸ்பி தலைமையில் விநாயக்கர் சதுர்த்தி ஊர்வலம் குறித்த ஆலோசனைக் கூட்டம்!
Next articleபுஷ்பா 2 படத்தில் இணையும் தேசிய விருது பெற்ற நடிகை… லேட்டஸ்ட் தகவல்