நயன்தாராவுக்கு ஆதரவாக.. தனுஷ் முகமூடிக்கு எதிராக மாறிய நடிகைகள்!!

Photo of author

By Jeevitha

Cinema News: இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா திருமண ஆவணப்படம் வெளியிட நடிகர் தனுஷ் சுமார் ரூ.10 கோடி கேட்டதாக வெளிவந்த அறிக்கை ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் திருமண ஆவணப்படம் ஏற்கனவே வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், அந்த படம் வெளியாகவில்லை. இந்த நிலையில் அவர்களின் ஆவணப்படம் வரும் 18-ஆம் தேதி வெளியாக உள்ள உள்ளது. அந்த திரைப்படத்தில் நானும் ரவுடி தான் என்னும் படத்தில் வரும் 3 நிமிட காட்சிகள் இருக்கிறது. இதற்கு நடிகர் தனுஷ் சுமார் 10 கோடி தர வேண்டும் என நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

இதற்கு காரணம் நானும் ரவுடி தான் படத்தை நடிகர் தனுஷ் தன்னுடைய வன்டர்பார் பிலிம்ஸ் மூலம் இயக்கியது. ஆனால் நயன்தாரா ஏற்கனவே வெளியிட்ட படத்தில் இருந்து வெறும் 3 நிமிட கட்சிக்கு 10 கோடி கேட்டது அதிர்ச்சி அளிக்கிறது என கூறி நாங்கள் சட்டப்படியாக இதை எதிர்கொள்வோம் என விளக்கம் அளித்துள்ளார். நயன்தாராவின் இந்த செயல் பெரிதும் பரவி வருகிறது. ஆனால் நயன்தாராவுக்கு ஆதரவாக பல நடிகைகள் வந்துள்ளனர்.

அதில் தனுஷ் பட ஹீரோயின்களும் உள்ளார்கள். இந்த நிலையில் ஸ்ருதிஹாசன் தனுஷ் உடன் 3 படத்தில் நடித்திருந்தார். அவர் இப்போது நயன்தாராவுக்கு ஆதரவாக சல்யூட் செய்துள்ளார். மேலும் தனுஷ் நடித்த பார்வதி, நஸ்ரியா, அனுபமா பரமேஸ்வரன், ஐஸ்வர்யா ராஜேஷ், மஞ்சுமா மோகன், ஈஷா தல்வார், அனா பென், ஐஸ்வர்யா லட்சுமி, அஞ்சு குரியன், அதிதி, பாலன் என பல நடிகைகள் நயன்தாராவின் பதிவிற்கு லைக் செய்துள்ளனர். இவ்வாறு பல நடிகைகள் தனுஷ்க்கு எதிராக இறங்கி உள்ளார்கள்.